nfte

Thursday, 30 June 2022

“ஏயூஏபி “ அமைப்பினை சென்னை தொலைபேசியில் ஒற்றுமைப் படுத்தவும் - வலிமைப் படுத்தவும் தோழர் சி். கே. எம் . தலைமையில் 27/06/2022 ( திங்கள் ) அன்று பூக்கடை வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நடந்தது . பிற்பகல் 3 மணிக்கு துவங்கி 6 மணிக்கு நிறைவு அடைந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் 14 தலைவர்கள் பங்கேற்றனர் . தோழர்கள் M.K. ராமசாமி ,          K.M. இளங்கோவன், ரவி, வீ.மதிவாணன் ( NFTE) , S.லிங்கமூர்த்தி , ராதாகிருஷ்ணன் ( FNTO), J.விஜயகுமார் , சுந்தரமூர்த்தி , கௌரிசங்கர் ( TEPU) , S.உமாசந்திரன் ( AIGETOA) , V. பாபு,    P. சங்கிலி (NFTCL ), சேகர் ( TPPO) உள்ளிட்டோர் ஆலோசனைகளை பகிர்ந்தனர் . AIBSNLEA மற்றும் BSNLDEU சங்கங்களின் மாநிலச் செயலாளர்கள் தொலைபேசி மூலம் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாமல் போனதற்கு தவிர்க்க இயலாத ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்வுகளே காரணம் என தகவல் தந்தனர் . 


கூட்டத்தின் துவக்கத்திலேயே தோழர் சி். கே. எம் . இன்றைய கூட்டத்தின் நோக்கத்தை தெளிவாக கூறினார் . இது ஏயூஏபி கூட்டம் அல்ல என்றும் மாறாக ஏயூஏபி அமைப்பில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையை சரிசெய்திட மூத்த தலைவர்களின் ஒரு முன்முயற்சி மட்டுமே என அவர் விளக்கினார் . கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஏயூஏபி கன்வீனர்  ஶ்ரீதர் சுப்பிரமணியம் எந்த தகவலையும சேர்மென் என்ற நிலையில் தோழர் சி். கே. எம் . அவர்களுக்கு தரவில்லை என்றும் ஆனால் அவர் திட்டமிட்டு பொய்யாக பிற சங்க தலைவர்களிடம்              தோழர் சி் கே எம் ஏயூஏபி கூட்டங்களில் பங்கேற்க மறுப்பதாக பிரச்சாரம் செய்து வருகிறார் என தனது தலைமையுரையில் விளக்கினார் .  


                        அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பங்குவிற்பனை கொள்கையை அமுலாக்க திட்டமிடும் நெருக்கடியான தருணத்தில் உருக்கு போன்றதோர் ஒற்றுமையே அவசிய தேவை என்பதால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் ஒன்றுபடுவது தேவை என்பதை தோழர்கள் லிங்கமூர்த்தி, விஜயகுமார் , உமாசந்திரன், இளங்கோவன், பாபு , சங்கிலி உள்ளிட்டோர் வலியுறுத்தினர் . கன்வீனர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவது ஜனநாயக பண்பாகாது எனவும் இந்த கூட்டத்தில் பேசிய தோழர்கள் அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் . ஏயூஏபி தேசிய தலைமை அறைகூவிய பல அம்சங்களை இன்னமும் சென்னை தொலைபேசியில் நடைமுறைபடுத்த முன்முயற்சிகளை இதுவரை எடுக்காதது குறித்தும் பலர் கவலை தெரிவித்தனர் . 


முடிவாக இன்றைய ஆலோசனை கூட்டத்தின் முடிவுகளை தோழர்கள் லிங்கமூர்த்தி மற்றும் உமாசந்திரன் இருவரும் கன்வீனரிடம் விளக்கி உடனடியாக ஒரு ஏயூஏபி கூட்டத்தை நடத்த கோருவது என தீர்மானிக்கப்பட்டது .









No comments: