nfte

Friday, 6 May 2022

 சென்னை தொலைபேசியில் நேரு நகர் R S U தொலைபேசி நிலையத்தில் J E ஆக பணிபுரியும்  ஆ. சந்திரகாந்த் எனும் அரைவேக்காடு சமூக வலைத்தளமான  “டுவிட்டரில் “ மே மாதம் 5 ந் தேதி

மிகவும் தரம் தாழ்ந்த வகையில் சென்னை தொலைபேசியில் உள்ள ஒட்டுமொத்த             NFTE- BSNL  சங்க உறுப்பினர்களை

  

    “ எல்லோரும் முட்டாள்கள்   மற்றும் கல்வியறிவு அற்ற தற்குறிகள் “ ( All are idiots and illiterate )  என நியாயமே இன்றி சாடியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. எண்ணற்ற பொறியியல் பட்டதாரிகளும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் , பட்டதாரிகளும் உறுப்பினராக உள்ள NFTE-BSNL        

சங்கத்தின் தோழர்களை  அவர் காரணமே இல்லாமல் பொதுவெளியில் அவமானப்படுத்தி கேவலம் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும் . அவர் 

சார்ந்திருக்கும்  SEWA - BSNL ( சென்னை தொலைபேசி ) அமைப்பு அவரது தவறான - அவதூறான செயலுக்காக உடனடியாக தலையிடும் - அவரது அடாத செயலுக்காக அவரை உடனடியாக நமது உறுப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வைக்கும் என நம்பினோம் . அதனால் தான் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இதுவரை நாம் காத்திருந்தோம் . 


ஆனால் இந்த இழிசெயலை அறிந்து நேற்று முதல் பலரும் நமது மாநிலச் சங்கம் திரு. ஆ. சந்திரகாந்த் , Junior Engineer , Nehru Nagar RSU ( BSNL) மீது உடனடியாக உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நமது சங்க உறுப்பினர்கள் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தயக்கமோ- தாமதமோ இன்றி அனுமதிக்க கோரி வருகின்றனர். அதனால் மேலே குறிப்பிட்ட திரு.ஆ. சந்திரகாந்த் அவர்களின் அருவருக்கத்தக்க பதிவால் பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான எவரும் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க மாநிலச் சங்கம் இந்த பதிவின் மூலமாக அனுமதி அளிக்கிறது. 


சி. கே.மதிவாணன்  , 

மாநிலச் செயலாளர், 

NFTE-BSNL

சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம்

06/05/2022 @ 5  PM.

No comments: