nfte

Friday, 20 May 2022

தோழர்களே... சொசைட்டிபற்றி அவதூறு பிரச்சாரம் செயதவர்களுக்கு, ஆணித்தரமான ஆதாரங்களுடன் பதில். தோழர் மதிவாணன் அளித்த நேர்காணல்.. அனைவரும் முழுமையாக பார்த்து தெளிவடைய வேண்டுகிறோம். நன்றி.


 நான் ‘டாட்ஸ் மீடியா’ ஊடகத்தில் நடத்திய நேர்காணல் காணொளி மே-19 அன்று வெளியானது. இந்த நிமிடம் வரை அதனை பல்லாயிரக் கண்காணோர் கண்டுள்ளனர் . பலர் பாராட்டுகின்ற அதேவேளையில் சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர் . எது எப்படியோ எனது கருத்து- உண்மையான நிலவரம் பொதுவெளியில் மிக அதிக அளவில் பகிரப்படுவதில் மகிழ்ச்சி. எனது வற்புறுத்தலை தாமதமாகவேனும் ஏற்று என் மீதும் , NFTE - BSNL சங்கத்தின் மீதும் தனிப்பட்ட முறையில் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எனது விளக்கத்தை அளிக்க வாய்பளித்த ‘ டாட்ஸ் மீடியா’ ஊடகத்திற்கு எனது மனமார்ந்ந நன்றி. 

ஒரு நண்பர் எனது நேர்காணல் குறித்து பதிவிடுகையில் “எந்த வக்கீலும் பீஸ் வாங்காமல் வாதாடுவதில்லை “ என கலாய்த்து உள்ளார் . அவர் சமீபத்தில் வெளியான ‘ ஜெய் பீம் ‘ படத்தில் வரும் நாயகன் ( வக்கீல்) உதாரணத்தை மறந்து விட்டார் போலும் . தவிர என் மீதான அவதூறு - அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு நான் விளக்கம் தருவதற்கு எனக்கு நானே பீஸ் தரவேண்டுமா என்ற சாதாரண அறிவு கூட அந்த நபருக்கு இல்லாமல் போனது அவருக்கு என் மீதுள்ள எல்லை இல்லா காழ்ப்புணர்ச்சியையும் குரோத மனப்பான்மையையும் காட்டுகிறது. இந்த கும்பல் பல ஆண்டுகளாய் கட்டி எழுப்பிய பொய்க் கதைகள் எனது ஒரே ஒரு நேர்காணலின் மூலம் தவிடுபொடியாகி தரைமட்டமானதால் அவர்களுக்கு என் மீது ஏற்பட்ட கடுங்கோபம் எனக்கு புரிகிறது. 

           எனக்குள்ள ஒரே கவலை இந்த பிரச்சனையினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 6500 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு விரைவாக அவர்களுக்கு சொசைட்டியிலிருந்து கிடைக்க வேண்டிய  தொகையை பெற்றுத் தரவேண்டும் என்பது மட்டும் தான் . எனது தீர்வினை அனைவரும் ஏற்று நடைமுறை படுத்த ஒப்புக் கொண்டால் இரண்டே மாதங்களில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காண இயலும் . அதை விடுத்து இந்த பிரச்சனை தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள முயலும் ஒரு கூட்டம் உள்நோக்கத்துடன் தடைகளை ஏற்படுத்த நினைத்தாலும் அவர்களின் முயற்சிகளை கூட்டுறவு சொசைட்டியின் நிர்வாகம் நிச்சயமாக முறியடிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் . இதற்காக  NFTE - BSNL  சங்கம் அனைத்து உதவிகளையும் சொசைட்டியின் இயக்குனர் குழுவுக்கு செய்ய தயாராக உள்ளது.

சி. கே. மதிவாணன் 
மாநிலச் செயலாளர் 
NFTE-BSNL 
சென்னை தொலைபேசி . 
@ Haripad , KERALA

No comments: