Friday, 7 January 2022

மனிதப் புனிதர் ஒப்பில்லாத் தலைவர் பெருந் தலைவர் O.P. குப்தா அவர்களின் நினைவு தினம் இன்று ( ஜனவரி-6) பூக்கடை வளாகத்தில் தோழர்கள் M.K. ராமசாமி மற்றும் N. தனபால் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இதில் தோழர் C. ரவி வரவேற்புரை ஆற்றினார். மூத்த தோழர் N.K. சீனிவாசன் சிறப்புரை நிகழ்த்தினார். தோழர்கள் C.K.M., V.பாபு ஆகியோர் கருத்துரை ஆற்றினர். தோழர் T. சத்யா நன்றியுரை ஆற்றினார். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட OPG அவர்களின் படத்திற்கு தோழர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இன்றைய நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் நன்றி பல. சி.கே.எம்.

 








No comments: