Monday, 22 November 2021

தலைமைப் பொதுமேலாளர் அவர்களுடன் சந்திப்பு :

  22/11/21 அன்று NFTE-BSNL மாநிலச் சங்க நிர்வாகிகள் சி.கே.எம், இளங்கோவன், ரவி, V.மதிவாணன் , ஆனந்த தேவன் ஆகியோர் CGM அவர்களை சந்தித்து ஊழியர் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தினர். GM ( HR) மற்றும் DGM (A) , AGM ( A) ஆகியோர் உடனிருந்தனர். 

மாதந்தோறும் GM ( HR) அவர்களுடன் நடக்கும் நான்காவது சனிக்கிழமை கூட்டம் நாளை மறுநாள் (24/11/21- காலை 11 மணிக்கு) நடைபெற இருப்பதால் ஊழியர்களின் மாற்றல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல‌வற்றை CGM அவர்களுடன் நடந்த இன்றைய கூட்டத்தில் நாம் விவாதிக்கவில்லை. கீழ்க்கண்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. 


1) கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட அனைத்து கேன்டின்களும் உடனடியாக திறந்து இயக்கப்படும். முன்பு கேன்டின்களை நடத்தியவர்களே இப்போதும் அவற்றை நடத்த கேட்டுக் கொள்ளப் படுவார்கள். 


2) கொரோனா பெருந் தொற்றால் மூடப்பட்ட அனைத்து மனமகிழ் மன்றங்களும் உடனடியாக திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் சில நிபந்தனைகளை இதற்காக நிர்வாகம் விதிக்கும். 


   அ) மனமகிழ் மன்றத்திற்கு மாதந்தோறும் சந்தா செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. 


     ஆ) மதிய இடைவேளை சமயம் 1 முதல் 2 மணி முடிய, மாலை 5 மணி முதல் 7 மணி முடிய மனமகிழ் மன்றங்கள் செயல்பட அனுமதி. 


 ‌    இ) குறைந்தபட்சம் பத்து உறுப்பினர்கள் உள்ள இடங்களில் மட்டுமே மனமகிழ் மன்றம் அங்கீகரிக்கப்படும். 


3) ஜெகஜீவன்ராம் குடியிருப்பு வளாகத்தின் RWA நிர்வாகம் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு மாநில நிர்வாகம் எடுத்துள்ள மிகவும் தவறான முடிவை தாமதமின்றி மாற்றிக் கொள்ள CGM உறுதியளித்தார். 


4) பல மாதங்களுக்கு முன்பே நிர்வாகம் ஒப்புக் கொண்டபடி NFTE-BSNL  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கேசுவல் லேபர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் ( Photo ID Cards) எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் வழங்கப்படும். 


5) ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கு பிறகு கடந்த ஏழு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத  துன்பம் தீர்ந்திட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உறுதியளித்தது. 


6) ATT ஊழியர்களை காவல் காக்கும் பணியில் ஈடுபடுத்துவது சம்பந்தமாக நிர்வாகம் கடந்த மாதம் சுற்றுக்கு விட்டிருந்த நகல் கொள்கை அறிக்கை மீது NFTE-BSNL சார்பில் மூன்று ஆலோசனைகள்/ திருத்தங்களை தெரிவித்தோம். அதனை ஏற்றுக் கொள்வதாக மாநில நிர்வாகம் ஒப்புக் கொண்டது. 


7) பூக்கடையில் பணியாற்றும் தோழர் மகேஷ் ரெட்டி , JE அவர்களின் Rule 8 மாற்றலுக்கு ஆந்திரா CGM ஒப்புதல் அளித்து விட்டதால் தாமதமின்றி அவரை மாற்றலில் ஆந்திராவுக்கு அனுப்ப நாம் கேட்டுக் கொண்டோம். இதற்கு CGM ஒப்புக் கொண்டார். 


இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்பாக நமது CGM தோழர் சி.கே.எம்.அவர்களுக்கு சால்வை அணிவித்து தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து சாதனை புரிந்ததற்காக வாழ்த்தினார். அவருக்கு நமது நன்றி.

No comments: