Friday, 8 October 2021

பிஎஸ்என்எல் , சென்னை தொலைபேசியின் தலைமைப் பொதுமேலாளர் Dr.V.K.சஞ்ஜீவி அவர்களுடன் NFTE-BSNL மாநிலச் சங்கம் 07/10/21 அன்று நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள்:

 

நிர்வாகத்தின் சார்பில்:
CGM, Sr.GM ( F), GM (HR) , GM ( Central/ North) , DGM( F), DGM( A),
AGM( E), SDE ( W)
NFTE-BSNL சார்பில்:
தோழர்கள் சி.கே.எம், இளங்கோவன், ரவி, பாபு, சிற்றரசு
ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். நன்பகல் 11.45 மணிக்கு துவங்கி பிற்பகல் 2 மணியளவில் சுமார் 2.15 மணி நேரம் நீண்ட இந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் 20 முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. அவற்றுள் ஒருசில அம்சங்கள் பின்வருமாறு:
1) நீண்ட காலமாக நடத்தப்படாத நான்கு மாவட்ட ஒர்க்ஸ் கமிட்டி கூட்டங்களும் 16/10/21 அன்று நடைபெறும். இதுவரை BSNLEU சங்கம் அதன் பிரதிநிதிகள் பெயர்ப் பட்டியலை நிர்வாகத்திற்கு வழங்கவில்லை. 15/10/21 க்குள் அச்சங்கம் பெயர் பட்டியலை தராவிட்டாலும் NFTE-BSNL பிரதிநிதிகளை மட்டும் வைத்து ஒர்க்ஸ் கமிட்டி கூட்டம் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும்.
2) இதுகாறும் வழங்கப்படாத 2019/ 2020/ 2021 ஆகிய மூன்றாண்டுகளுக்கான LEVERIES தொகை தற்பொழுது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு முன்னுரிமை தந்து விரைவில் வழங்கப்படும்.
3) 2021 ‌ஜனவரி முதல் செப்டம்பர் முடிய பணிஓய்வுப் பெற்ற 48 ஊழியர்களுக்கு கார்ப்பரேட் அலுவலகம் / சேஷமநல போர்டு அனுமதிக்கப்பட்ட தொகையில் GIFT தொகை அடுத்த சில வாரங்களில் பட்டுவாடா செய்யப்படும்.
4) 31/01/2020 அன்று VRS-2019 திட்டத்தின் கீழ் வெளியேறிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களில் இதுவரை சுமார் 250 பேருக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ளோர் அனைவருக்கும் நிதிநிலையைப் பொறுத்து மாதந்தோறும் 25 பேருக்கும் குறையாமல் இப்பரிசுத்
தொகை வழங்கப்படும். ( நமது சங்கத்தின் முயற்சியால் தான் அறுபது வயதை பூர்த்தி செய்யும் போது தான் VRS-2019 ல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற நிபந்தனையை மாநில நிர்வாகம் கைவிட்டது என்பது நினைவு கூறத்தக்கது.)
5) தோழர் A.N. முனீர் அலி , (மாம்பலம் CSC ) அவர்களுக்கு 2000 ஆண்டில் தவறாக வழங்கப்பட்ட பணிநியமனம் குறித்து விரிவான விளக்கம் நிர்வாகத் தரப்பிடமிருந்து மாநிலச் சங்கத்திற்கு அளிக்கப்படும்.
6) பாதுகாப்பு பணியில் ATT ஊழியர்களை பணியமர்த்தும் கொள்கை உடனடியாக மறுபரிசீலனை செய்யப்படும். மாநிலச் சங்கத்திடமும் ஆலோசனை பெறப்படும்.
7) 24 கேசுவல் ஊழியர்களின் சம்பளம், கிராக்கிப்படி, ஆண்டு ஊதிய உயர்வு, நிரந்தரம், ஊதிய பட்டியல் , புகைப்பட அடையாள அட்டை ஆகியவை குறித்து சரியான முடிவெடுத்து அதனை தாமதமின்றி அமலாக்க வேண்டும்.
2006 ல் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே பத்தாண்டு TSM சேவை முடித்தோரை நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களின் ஊதியம் ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
9) ஒப்பந்த தொழிலாளர்களின் சுரண்டல் உடனடியாக நிறுத்தப் படவேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்கள் கான்ட்ராக்டர்களால் அப்பட்டமாக மீறப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
10) அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2020 முடிய செங்கற்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் RSM Associates, Alart Security Service ஆகிய இரண்டு கான்ட்ராக்டர்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் ஓராண்டு ஊதியத்தை வழங்க வேண்டும்.
11) மதுராந்தகம் பகுதிக்கு தாமதமின்றி ஒரு SDE அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். கல்பாக்கம்/அணுபுரத்தில் சொற்ப எண்ணிக்கையில் இணைப்புகள் உள்ளதால் அங்கு இரண்டு SDE அதிகாரிகளை பணியமர்த்தி இருப்பது அவசியமற்றது.
12) Rule 8 மாற்றத்துக்காக காத்திருக்கும் ஊழியர்களை தாமதமின்றி வேறு மாநிலங்களுக்கு மாற்றலில் செல்ல உத்தரவிட வேண்டும். இதற்கான காத்திருப்பு பட்டியல் பொதுவானதாக இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கு என்று தனியாக Waiting List பராமரிக்க வேண்டும்.
13) NEPP பதவி உயர்வு வழங்குதலில் உள்ள தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப் படவேண்டும். ஓரிரு மாதங்களுக்குள் அனைத்து தகுதியான ஊழியருக்கும் NEPP வழங்கப்பட வேண்டும். தோழர் அன்பு, T T ( பூக்கடை) அவர்களுக்கு இதுவரை ஒரு NEPP கூட வழங்கப்படாத நிலை மாறவேண்டும்.
14) தோழர் B. குகநாதன், J.E. ( அண்ணா நகர்) அவர்களுக்கு தவறுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ஐந்து நாள் ஊதியத்தை உடனடியாக திருப்பித் தரவேண்டும்.
15) வடக்கு பகுதி வணிக பகுதி Pay section 501 ஊழியர்கள்/ அதிகாரிகளுக்கு ஊதியம் போடும் பணியை செய்கிறது. இங்கு உள்ள இரண்டு AOS ஊழியர்களுக்கு மிகுந்த பணிச்சுமை. எனவே கூடுதலாக ஒரு எழுத்தரை இப்பகுதியில் பணியமர்த்த வேண்டும்.
CGM அவர்களின் பங்களிப்பு மிக வு ம் உதவிகரமாக- பயனளிப்பதாக அமைந்தது . அவருக்கு நமது நன்றி.
சி.கே.எம்.
07/10/21.

No comments: