Monday, 22 February 2021

உதவாக்கரை சங்கத்தின் அநியாய வசூல்:

 

நமது ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளத்தை இன்று (22/02/21) மதியம் பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்கி உள்ளது. 2020 டிசம்பர் மாத ஊதியம் 2021 ஜனவரி -21 ல் தான் வழங்கப் பட்டது. அனேகமாக மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்கும் முறையை மாற்றி 21 நாட்கள் தாமதம் செய்து மாதாந்திர ஊதியத்தை நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறது.‌ ஆனால் இன்று சம்பளம் பட்டுவாடா ஆனதை தமது சாதனையாக (?) சொல்லி அதற்காக ஊழியர்களிடம் நன்கொடை வசூலிக்க BSNLEU முனைகிறது. இதைவிட அநியாயம் வேறெதுவும் இல்லை. மாதந்தோறும் 45 ரூபாயை சந்தாவாக தவறாமல் பெற்றுக் கொள்ளும் அந்த உதவாக்கரை சங்கம் கூடுதலாக மாத ஊதியம் 21 நாட்கள் தாமதமாக கிடைப்பதற்கும் உறுப்பினர்களிடம் நன்கொடை வசூலிப்பது அடாத செயல்

No comments: