Wednesday, 14 October 2020

 PRESS BRIEF****
                                                       நட்டத்தில் நலிந்து ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவதற்கே இயலாத படுமோசமான நிதி நெருக்கடியால் தவிக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை கைத்தூக்கிவிட மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும் நல்ல முடிவினை நன்றியுடன் வரவேற்கிறோம்.சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது. மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக NFTE-BSNL சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் பிரதமர், தொலைத்தொடர்பு அமைச்சர் உள்ளிட்ட பலரையும் இதற்காக எண்ணற்ற வேண்டுகோள்- கோரிக்கை மனுக்கள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களும் தங்களின் அனைத்து தொலைபேசி தேவைகளுக்கும் அரசுக்கு சொந்தமான  BSNL/ MTNL நிறுவனங்களையே பயன்படுத்திட உத்திரவிட வேண்டும் என நீண்ட காலம் வற்புறுத்தி வந்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் பங்கேற்ற ஒரு சிறப்பு  கருத்தரங்கத்தை பல்லாண்டுகளுக்கு முன்பு நடத்தி இந்த கோரிக்கையை முன்மொழிந்தது சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம்.  மாநிலச் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கூட இந்த கோரிக்கையை நாம் வலியுறுத்தினோம். இப்போது மத்திய அமைச்சரவை கூட்டம் இத்தகைய நல்லதோர் முடிவை எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது; பாராட்டுக்கு உரியது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் நிச்சயமாக பெரிதும் பயனடையும். இதற்காக மத்திய அரசுக்கு, குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிதனை‌ ஒட்டுமொத்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் உரித்தாக்குகிறேன். 

சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலாளர்
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் (பிஎஸ்என்எல்)
சென்னை. 
ckmbsnl@gmail.com
9487621621.


 

No comments: