Thursday, 15 October 2020

மாம்பலம் இணைப்பக வளாகத்தில் 15/10/20 அன்று NFTE-BSNL சம்மேளனத்தில் இணைந்த தென் கிழக்கு பகுதியின் BSNLEU சங்கத்தின் மாநில/ மாவட்ட நிர்வாகிகளை வரவேற்கும் விழா நூற்றுக்கணக்கான தோழர்கள்/ தோழியர்களின் பங்கெடுப்போடு சிறப்பாக நடைபெற்றது. தோழர் முனீர் அலி தலைமை ஏற்றார். தோழர் V.மதிவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக தென் சென்னை மாவட்ட NFTE-BSNL சங்க தலைவர் M.நாகராஜன் சம்மேளனத்தின் கொடியேற்றினார்.‌ மாநிலச் செயலாளர் சி.கே.எம். தாய்ச் சங்கத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்று பேசியதுடன் மாம்பலம் மற்றும் டக்ட் கேபிள் மெயின்டனென்ஸ் கிளைகளின் மாநாட்டை துவக்கி வைத்தார்.‌மாநிலத் தலைவர் ராமசாமி புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பு பலகையை திறந்து வைத்து பேசினார். புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் , உதவாக்கரை சங்கத்திலிருந்து விலகி NFTE-BSNL சங்கத்தில் இணைந்தோரை‌ வரவேற்றும் தோழர்கள் இளங்கோவன், ACS, ரவி, CT, ராமலிங்கம், ஜெயகுமார் உள்ளிட்டோர் பேசினர். மாம்பலம் கிளையின் புதிய செயலாளர் தாமோதரன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

 



























No comments: