Monday, 10 February 2020

மாநிலச் சங்க செயற்குழு கூட்டம் - 10/02/2020:


பூக்கடை வளாகத்தில் உள்ள மாநிலச் சங்க அலுவலகத்தில் இன்று பிற்பகல் NFTE- BSNL சம்மேளனத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. 25 தோழர்கள் பங்கேற்றனர். தோழர்கள் ராஜேந்திரன், இளங்கோவன், பாபு ஆகியோர் தவிர்க்க இயலாத காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என முன் அனுமதி பெற்றிருந்தனர். மாநிலச் செயலாளர் சி.கே.எம். நிகழ்ச்சி நிரலை அறிமுகப் மட்டபடுத்தி பேசினார். விரிவான விவாதத்திற்கு பின்னர் (1)பிஎஸ்என்எல் CMD புருவார் மற்றும் BSNLEU பொதுச் செயலாளர் அபிமன்யு ஆகியோரின் பொறுப்பற்ற ஆணவப் பேச்சுக்கு செயற்குழு கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.
(2) NFTE-BSNL , NFTCL , தொழிலாளர் கல்வி மையம் ஒன்றிணைந்து சென்னையில் 24/02/2020 அன்று நடந்த திட்டமிட்டுள்ள பெருந் திரள் தார்ணா போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. 
(3) பிப்ரவரி 16 ( ஞாயிறு) அன்று ‌போரூரில் ( குன்றத்தூர் ரோட்டில்) உள்ள சரிதா மண்டபத்தில் நடைபெறும் காஞ்சிபுரம் மாவட்ட சங்கத்தின் தலைவர் N.V. சோமசுந்தரம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவிலும் - பிப்ரவரி 25 ( செவ்வாய்) அன்று மகாபலிபுரம் செளமியா மண்டபத்தில் நடைபெறும் காஞ்சிபுரம் மாவட்ட சங்கத்தின் செயலாளர் S. ஏகாம்பரம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவிலும் பெருந் திரளான தோழர்களை‌ திரட்டிட தீர்மானிக்கப்பட்டது.                        இரு தோழர்களின் சங்கப்பற்றும்‌ - தொழிற்சங்க செயல்பாடும் மிகவும் பாராட்டுக்கு உரியது என்பதால் இவ்விருவரின் பாராட்டு விழாவையும் சிறப்பான முறையில் நடத்திட‌ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments: