Saturday, 11 January 2020

BSNLEU சங்கத்தின் முட்டாள்தனமான அணுகுமுறை !

22/10/2019 வரை NO VRS என்று வாய்க்கிழிய பேசிவந்த அபிமன்யு இரண்டு மாதங்களாக மெளன விரதம் இருப்பதாக தகவல். மோடியரசின் ஆட்குறைப்பு திட்டத்தை பற்றி அதனால் தான் அவரது சங்கம் வாய்த்திறக்காமல் மெளனம் சம்மதம் என்ற ரீதியில் இன்றுவரை பதுங்கிக் கிடக்கிறது.
ஆனால் NFTE- BSNL சார்பில் நாம் தொடர்ந்து அரசின் ஆட்குறைப்பு திட்டத்தை எதிர்த்து குரலெழுப்பி வருகிறோம். டில்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தொடுத்த வழக்கில் சில தினங்களில் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். சென்னை CAT தீர்ப்பாயத்தில் நமது தோழர்கள் சுகுமார், சிரிராம் ஆகியோர் தொடுத்துள்ள வழக்கில் 24/01/2020 ல் தீர்ப்பு வெளியாகும்.
தவிர மாநில நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி 31-01-2020 க்கு பிந்தைய சூழலில் நாம் எதிர்க் கொள்ளப் போகும் கடும் ஊழியர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க பிசினஸ் ஏரியா வாரியாக கூட்டங்கள் நடத்த செய்தோம். இந்த கூட்டங்களில் பங்கேற்ற BSNLEU தோழர்கள் சூழலை புரிந்து கொள்ளாமல் கிளிப்பிள்ளை போல " கார்ப்பரேட் அலுவலக உத்தரவுப்படி புதிய அளவீடுகளை" ( Norms for Cadres ) அமுலாக்க வேண்டும் என கூறினர். பாவம் அவர்களுக்கு அப்படி தவறாக வழிகாட்டப் பட்டுள்ளது. இந்த முட்டாள்தனமான அணுகுமுறையை நாம் அனைத்து பிசினஸ் ஏரியா கூட்டங்களிலும் முறியடித்தோம்.
1) சர்ச்சைக்குரிய அந்த கார்ப்பரேட் அலுவலக உத்தரவு Territorial Circles CGM களுக்கு தான் அனுப்பப்பட்டது. பெருநகரங்களான‌ (Metro City)
சென்னை தொலைபேசி மற்றும் கொல்கத்தா தொலைபேசி CGM களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
2) எண்ணற்ற கேடர்கள் உள்ள நமது நிறுவனத்தில் மூன்றே மூன்று கேடர்களுக்கு மட்டுமே ( JE / T T / A T T புதிய உயர்த்தப்பட்ட அளவீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற கேடர்களுக்கு ( OS / AOS/ OA ) என்ன அடிப்படையில் அளவீட்டை கணக்கிடுவது என்ற வழிகாட்டலும் இல்லை.
3) தவிர நகர்ப்புறங்களில் 1000 இணைப்புகளுக்கு ஒரு T T / A T T என்று குறிப்பிட்டுள்ள கார்ப்பரேட் அலுவலக உத்தரவு உட்புறப் பணிகளுக்கு - புறப்பகுதி பணிகளுக்கு என்ன அளவீடு என்று குறிப்பிடவில்லை.‌மேலும் T T கேடர் மூன்றாம் பிரிவை ( Group C) சார்ந்தது. A T T கேடர் நான்காம் பிரிவைச் ( Group D) சேர்ந்தது. இரண்டு வித்தியாசமான கேடர்களை‌ ஒரே கேடர் போல பாவிப்பதும் தவறாகும்.
இது போன்ற தவறுகள் களைய கார்ப்பரேட் தலைமையகத்திற்கு விளக்கம் கேட்டுப் பெறுவதற்கு மாநில நிர்வாகம் ஒப்புக் கொண்டது. எனவே இந்த தவறான உத்தரவின் அடிப்படையில் ஆலோசனை கூட்டங்களில் விவாதம் நடத்த தேவையில்லை என்ற NFTE-BSNL சம்மேளனத்தின் நிலைபாட்டை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. அதன் பின்னரும் எஜமான விசுவாசத்துடன் BSNLEU சங்கத்தினர் Corporate Headquarters உத்தரவை தூக்கிப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டது அவமானகரமான செயலாகும்.
தற்போது நகர்புறங்களில் 450 இணைப்புகளுக்கு ஒரு . கேடர் என Norms உள்ளது. இதனை இரண்டு மடங்குக்கும் கூடுதலாக உயர்த்துவது அநியாயம். நடைமுறைக்கு ஏற்றதல்ல. தமது உறுப்பினர்கள் எல்லாரும் VRS ல் வெளியேறிய பின்னர் இருக்கும் NFTE-BSNL உறுப்பினர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று நிர்வாகத்திற்கு பல்லக்கு தூக்கும் BSNLEU மாநிலச் சங்கம் இப்போது மிக முக்கியமாக Telecom Society க்கு எதிராக செயல்படுவதில் ஆர்வமுடன் உள்ளது. மோடி அரசுக்கும்- BSNL நிர்வாகத்திற்கும் சலாம் போடும் BSNLEU சங்கத் தலைமை சொசைட்டி மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் அப்பட்டமாக ஊழியர்களையும் , கணக்கு அதிகாரிகளையும் குழப்ப முனைந்துள்ளது. அந்த கையாலாகாத தலைமையின் இந்த சித்துவேலையையும் நமது தோழர்கள்- விவரமான ஊழியர்கள் முறியடிப்பார்கள் என்பது உறுதி.
BSNL நிறுவனத்தையும்- லட்சக்கணக்கான ஊழியரையும் காப்பாற்றத் தவறிய அந்த வாய்ச் சவடால் தலைவர்கள் சொசைட்டி தேர்தலில் பெற்ற படுதோல்வியை ஜீரணிக்க முடியாமல் பித்தம் பிடித்து சித்தம் கலங்கி உள்ளனர்.‌
அவர்களின் பேச்சை அவர்கள் சங்கத்தினரே கேட்க மறுத்து விட்ட நிலையில் ஊருக்கு இலவசமாக உபதேசம் செய்யும் வேலையை அந்த சங்கத்தின் தலைவர்கள் கைவிடுவது நல்லது.
சி.கே.எம்.
11/01/2020.

No comments: