Monday, 2 December 2019

ஆருயிர்த் தோழர்களே !

 I T S அதிகாரிகள் சங்கமான I T S A மாதாந்திர ஊதியம்  அவர்களுக்கு தொடர்ந்து காலதாமதமாக வழங்கப்படுவதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து சாதகமான தீர்ப்பையும் பெற்றது. ஆனால் அந்த தீர்ப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிர்வாகம் முறையாக அமுலாக்க தவறியதால் மறுபடியும் I T S A சங்கம் டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இதன் மீது தீர்ப்பு வழங்கிய டில்லி உயர்நீதிமன்றம் 
டிசம்பர் 05 க்குள் அனைத்து I T S அதிகாரிகளுக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களின் ஊதியத்தை வழங்கிட நிர்வாகத்திற்கு கண்டிப்பான கட்டளை இட்டது. எனவே வேறுவழியின்றி நிர்வாகம் அந்த தீர்ப்பை அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதுவரை கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்திருந்த ஊழியர்களுக்கான அனைத்து அகில இந்திய சங்கங்களும் தூக்கம் கலைந்து தன்மான உணர்வு மேலோங்கி I T S அதிகாரிகளுக்கு மட்டும் 05-12-2019 க்குள் ஒருவேளை நிர்வாகம் நிலுவை வைத்திருக்கும் இரண்டு மாத ஊதியத்தை வழங்கி விட்டால் தங்களின் மானத்தை ஊழியர்கள் கப்பலில் ஏற்றி அனுப்பி விடுவார்கள் என்றஞ்சி திடுதிப்பென்று ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன. ஆனால் வழக்கம் போல மிகவும் பரிதாபத்துக்குரிய ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம் குறித்து எந்த கோரிக்கையையும் அந்த அகில இந்திய சங்கங்கள் நிர்வாகத்திடம் முன் வைக்க தயாராக இல்லை. அவற்றிற்கு I T S அதிகாரிகள் ஊதியம் பெற்றுவிட்டால் தங்களின் நிலை படுமோசமாகிவிடுமே என்ற அச்சம் வாட்டி வதைக்கிறது. எனவே நமது
இரு சம்மேளனங்களும் ஒன்றிணைந்து ( NFTE- BSNL+ NFTCL) டிசம்பர் 04 அன்று மதிய வேளையில் சென்னை தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில்
கீழ்க்கண்ட இரு கோரிக்கைகளை வலியுறுத்தி எழுச்சி மிக்க கன்டண ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்தோம். பெருமளவில் தோழர்கள் திரள வேண்டுகிறோம். 

#.  ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டாதே ; அக்டோபர்/ நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழக்கு !

#.  ஏழு மாத ஊதிய நிலுவையை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக பட்டுவாடா செய் !
         போராட்ட வாழ்த்துக்களுடன்
  ‌ ‌.         தோழமை அன்புடன்
                  சி.கே.எம்
                        எஸ்.ஆனந்தன்
                               02/12/19
+++++++++++++++++++++++++++

No comments: