Monday, 2 December 2019

வாழ்க வசவாளர்கள்

வாழ்க வசவாளர்கள் !                  ‌ VRS - 2019 க்கு ஆதரவாக  பிரச்சாரம் செய்யும் ஒரு கோயமுத்தூர் தோழரும் மற்றொரு திருப்பூர் தோழரும் எனது கேள்விகளுக்கு பதிலையோ- விளக்கத்தையோ இதுவரை நேரிடையாக அளிக்க முனையாமல் குட்டிக் கதைகளையும், தத்துவ வியாக்யானத்தையும் மட்டுமே பதிவிட்டு வருகின்றனர். காரணம் அரசின் மீதான எனது குற்றச்சாட்டுகளுக்கு அவர்களால் பதில் சொல்லவும் இயலாது. பகிரங்கமாக நியாயப் படுத்தவும் இயலாது. எனவே தான் தங்களுடன் 80000 பேர் இருப்பதாக ஜம்பம் அடிக்கிறார். எதிர்காலம் குறித்த பெரும் அச்சம்- வேலைப்பளு கூடுமோ ? மாற்றல் வந்துவிடுமோ என்ற கவலையில் பலபேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். JAO/AO/ CAO போன்ற Accounts பகுதியில் பணிபுரியும் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் விருப்பம் தெரிவித்து விட்டனராம். ஆகவே அரசின் திட்டம் நல்லதாகவே இருக்கும் என்றும் அந்த தோழர் VRS க்கு முட்டுக் கொடுத்துள்ளார். இவர் போன்ற பல பண்டிதர்களும் மறப்பது - மறைப்பது இந்த திட்டத்தால் அரசுக்கு ஒட்டுமொத்த லாபம். அதனால் தான் அது ரூபாய் 16000 கோடி அளவுக்கு பட்ஜெட் சப்போர்ட் தர முன்வந்தது. ஊழியர்கள் தான் இழப்புக்கு ஆளாகி வாடப் போகின்றனர். ஊழியர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது என்று கூறி 1,04,400 பேரை வெளியேற்ற திட்டம் அமுலாக்கும் அரசும் நிர்வாகமும் ஏன் அதே சூட்டோடு புதிதாக ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆளெடுக்கிறார்கள் ? அதுவும் நிரந்தர பணிகளை செய்ய தற்காலிக அடிப்படையில் எடுக்கிறார்கள்? இந்த அநியாயத்தை கம்யூனிசம் பேசும் இந்த இரு தோழர்களும் நியாயப்படுத்துவது வியப்பளிக்கிறது.
 திருப்பூர் தோழர் ஒருபடி மேலே போய் எனக்கு சந்தா பணம் குறைந்து விடும் என்ற கவலை என உள்நோக்கம் கற்பித்துள்ளார். முகம் காட்ட பயந்து வேறு சிலர் அரசின் ஆட்குறைப்பு திட்டத்திற்கு உறுதியான எதிர்ப்பை நான் ஒருவன் மட்டும் காட்டுவதால் என் மீது அவதூறுகளை முகநூலில் அள்ளிக் கொட்டுகிறார்கள். அவர்களது உள்ளங்களில் அடங்கிக் கிடக்கும் அசிங்கங்களை வெளிக் கொட்டுகிறார்கள். இது குறித்து எனக்கு கவலையில்லை. தலைவர் குப்தாவை விடவா இந்த தேசத்தில் வேறு ஒரு தொழிற்சங்க தலைவர் அவதூறு - ஏச்சுக்களை  இனி சந்தித்து விடப்போகிறார் ?
   எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கடந்த ஒரு வாரமாக என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டவர்கள்- எனது சொற்பொழிவுகளை‌ காது கொடுத்து கேட்டவர்கள் என்ற வகையில் நூற்றுக்கும் அதிகமான தோழர்- தோழியர்கள் தங்களது விருப்பத்தை ரத்து / வாபஸ் செய்திருப்பதில் எனக்கு திருப்தி.  அரசின் இந்த ஆட்குறைப்பு திட்டத்திற்கு எதிராக இறுதிவரை (31-01-2020) உறுதியாக நான் எல்லா வகையிலும் தனிஒருவனாக‌ போராடுவேன். என்னால் இயன்ற அளவு ஊழியர்களின் உரிமைகளை- அவர்தம் சட்டபூர்வமான சலுகைகளை அரசும் நிர்வாகமும் அபகரிக்க விடமாட்டேன். மெளனம் சாதிக்க மாட்டேன். பலரின் ஆதரவும் பாராட்டும் என் முயற்சிகளுக்கு நாடுமுழுவதும் இருக்கையில் சிலரின் கீழ்த்தரமான வசவுகள் என்னை எதுவும் செய்திட இயலாது.

CKM
சி.கே.எம்.

No comments: