Thursday, 7 November 2019

மாநிலச் சங்க பொதுக்குழு கூட்டம்--07/11/19:

இன்று பிற்பகலில் பூக்கடை வளாகத்தில் மாநிலத் தலைவர் ராமசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அரசு அறிவித்துள்ள புத்தாக்க திட்டம் குறித்து மாநில துணைச் செயலாளர்K.M.இளங்கோவன் முன்மொழிந்த  தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. விருப்ப ஓய்வு திட்டம் குறித்து அவசரப் படாமல் நிதானமாக இருக்க- முழுமையான விவரங்கள் அறிந்த பிறகு முடிவெடுக்க கருத்து கூறப்பட்டது. ஏழாவது மாநில மாநாட்டின் வரவேற்புக் குழு  தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை கன்வீனர் N.தனபால் சமர்ப்பித்தார். இதனை பொதுக்குழு கூட்டம் ஏற்றுக் கொண்டது. வரவேற்புக் குழுவின் சார்பில் எஞ்சிய ரூபாய் இரண்டு லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து எழுநூற்று பதினொன்று ( Rupees 2,28,711/- ) மாநிலப் பொருளாளர் C.ரவி அவர்களிடம் ஒப்படைத்தார். வரவேற்புக் குழுவின் இந்த உதவிக்கு நமது நன்றிதனை உரித்தாக்குகிறோம். மாநிலச் செயலாளர் பொறுப்பு தோழர் K.M. இளங்கோவன் அவர்களுக்கு 09/11/19 முதல் 30/11/19 முடிய வழங்கப்பட்டதை பொதுக்குழு அங்கீகரித்தது. மாநிலப் பொருளாளர் ரவி நன்றியுரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் புத்தாக்கம் குறித்து நான்கு பக்க சுற்றறிக்கை அனைத்து உறுப்பினர்களும் வினியோகிக்கப்பட்டது.







No comments: