Thursday, 21 March 2019

O P GUPTHA 98TH BIRTHDAY CELEBRATION AT CHENNAI TELEPHONES

சங்க முழக்கம் இதழின் ஆசிரியர் குழு கூட்டம்-23-03-19 :
தோழர் குப்தா அவர்களின் 98 வது பிறந்தநாள் சிறப்பிதழாக ஏப்ரல் மாத "சங்க முழக்கம் " இதழ் வெளிவருகிறது. அவரது 98 வது பிறந்தநாளான ஏப்ரல்-8 அன்று மாலை 3 மணியளவில் பூக்கடை வளாகத்தில் நடைபெறவுள்ள விழாவில் சங்கமுழக்கம் இதழ் உறுப்பினர்களுக்கு வினியோகிக்கப்படும். இந்த இதழை இறுதி செய்திட ஆசிரியர் குழு கூட்டம் எதிர்வரும் 23-03-2019 அன்று மாலை 4 மணிக்கு நமது மாநிலச் சங்க அலுவலகத்தில் நடைபெறும். பென்ஷன் உரிமையை பெருந் துணிவுடன் போராடி பாதுகாத்த பெருந்தகை O.P.குப்தா. அதற்காக நாம் அனைவருமே அவருக்கு ஒருவகையில் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். அவரது நினைவுகள் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் பிறந்தநாள் விழாவை பெரும் மகிழ்வுடன் கொண்டாட தயாராவோம்.
இவ்வாண்டு இவ்விழாவில் சென்னை தொலைபேசி மாநிலத்தின் அனைத்துச் சங்க மாநிலச் செயலாளர்களையும் பங்கேற்க அழைத்துள்ளோம். இது தவிர சம்மேளனத்தின் தலைவர் இஸ்லாம் அஹமது, பொதுச் செயலாளர் சந்தேஷ்வர் சிங், முன்னாள் சம்மேளனச் செயலாளர் ஆர்.கே, தலைமைப் பொதுமேலாளர் கலாவதி உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பிக்க இசைந்துள்ளனர்


No comments: