thanks

thanks
ckm thanks

Monday, 25 March 2019

From fb page of com subbarayan

பாதையைத் தேடுபவன்
சாதாரண மனிதன்,
பாதையை உருவாக்குபவன் சாதனை மனிதன் !!!
அனைத்து BSNL ஊழியர்களும் சம்பள மாற்றம் கோரி போராடியதற்கு பரிசாக சம்பள வெட்டு, சம்பள தாமதம் பெற்ற சூழலில், ஆபத்பாந்தவன், அநாதை ரட்சகன் போல தனது குடும்ப சம்பந்தமான வெளிநாட்டு பயணத்தை சுருக்கிக்கொண்டு நாட்டுக்கு திரும்பி வந்து, 2000த்தில் வாஜ்பாயி அரசு NFTE, FNTO சங்கத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க முனைப்பாக செயல்பட்டுள்ளார் நமது தலைவர் தோழர் CKM.
அவருடைய முயற்சிக்கு முழு ஆதரவு தருவதாக நமது ஒப்பற்ற தலைவர் O.P. குப்தா அவர்களுடன் இணைந்து FNTO சார்பாக 2000த்தில் அந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தோழர் வள்ளிநாயகம் அவர்கள் தெரிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உடன்பாட்டின் பின்னணி, அதை தகர்க்கும் வகையில் அதன்பின் வந்த அரசாங்கங்கள் செய்த சதிகள், BSNLக்கு ஏற்பட்ட இழப்புகள், எல்லாவற்றிற்கும் உச்சமாக பிரதமர் மோடியே ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பர தூதராக மாறி பல லட்சம் கோடி சொத்துக்களைக் கொண்ட BSNLஐ ஓட்டாண்டியாக்க செய்த மோசடியை நமது உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிடம் விளக்கி 18 பக்க Noteஐ இரவோடு இரவாக தயாரித்து கொடுத்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டுப்போன அந்த மூத்த வழக்கறிஞர் கூறிய வார்த்தை,
" Mr. Mathivanan, your blood and life is BSNL".
BSNLஐ காக்க தன் பென்சனே கேள்விக்குறியான போதும் போராடிய தோழர் CKM அவர்களை, ஒரு சில மணி நேரத்திலேயே சரியாக எடைபோட்டு விட்டார் அந்த வழக்கறிஞர்.
இதேபோல 2004ல் பென்சன் செலவு முழுவதையும் BSNL நிறுவனமே ஏற்க வேண்டும் என்ற அரசின் அடாத உத்திரவை எதிர்த்து தோழர்கள் ஜெகன், விச்சாரே, கோலி ஆகியோர் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க, தோழர் குப்தா அதை எதிர்த்து CLCயிடம் மிகுந்த அறிவாற்றலோடு வாதாடியபோது, CLC அவர்கள், DOT செயலரிடம்" O.P. Gupta is not only asset to the BSNL workers, but also an asset to the BSNL" என்று கூறியது நினைவுக்கு வருகிறது. குப்தா அவர்களின் உண்மையான வாரிசாக செயல்படும் தோழர் மதி அவர்களின் சிறந்த செயல்பாட்டுக்கு உற்ற துணையாய் இருப்போம்.
Image may contain: 7 people, including Subbarayan Lakshman, people sitting and people standing

No comments: