Monday, 18 March 2019

முதன்மை பொதுமேலாளர் (நிர்வாகம்) மற்றும் மூத்த பொதுமேலாளர் (( Establishment)) அவர்களுடன் சந்திப்பு

Image result for miot hospital pictures
இன்று நமது தோழர் மாநிலச் செயலர் மதிவாணன் மற்றும் அகில இந்திய தலைவர் இஸ்லாம் அவர்களுடன் டெல்லியில் முதன்மை பொதுமேலாளர் நிர்வாகம் மற்றும் பொதுமேலாளர்(( Establishment))  அவர்களுடன் நமது முக்கிய பிரச்சனையான மியாட் மருத்துவமனை BSNLMRS லிருந்து 31-03-2019 இலிருந்து விலக இருக்கும் அபாயம்  பற்றி பேசினார்.

மியாட் மருத்துவமன் தமிழ்நாடு,சென்னை மற்றும்  STR and STP பகுதிகளுக்கு BSNLMRS மூலம் சிறந்த மருத்துவம் அளித்து வருகிறது. அந்த மருத்துவமனைக்கு அதிய தொகை பாக்கி செலுத்தப்படாமல் இருப்பதால் நாம் சிகிச்சை பெறும் மருத்துவனை அட்டவணையிலிருந்து நீக்கப்படுகின்ற அபாயம் உள்ளது. இதுகுறித்துப் பேசப்பட்டது.

அப்போது நிர்வாகம் அதிகப்படியான கடன் சுமையில் பி.எஸ்..என்.எல் இருப்பதால் பணம் செலுத்த இயலவில்லை என்று கைவிரித்தது. இருப்பினும் நமது மாநிலச் செயலர் குறைந்தபட்சம் அவர்களுக்கும் செலுத்த வேண்டிய தொகையில் (மொத்தம் 5 கோடி நிலுவை உள்ளது) ஒருகோடியாவது செலுத்தும்பட்சத்தில் மருத்துவனை நிர்வாகத்துடன் பேசி தொடர்ந்து நமது தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி தரச் செய்யலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் நிர்வாகம் இதுகுறித்து வங்கியுடன் பேசி முடிவு எடுப்பதாக சொல்லி உள்ளார்.

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்.

T

No comments: