Tuesday, 26 March 2019

மகிழ்ச்சியான செய்தி:


Image result for miot hospital logo
கடந்த வாரம் தோழர் சி.கே.எம். புதுடெல்லி சென்றிருந்த போது கார்பரேட் அலுவலகத்தில் உயரதிகாரிகளை சந்தித்து சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தார். அதில் ஒன்று சென்னை மியாட் மருத்துவமனைக்கு சென்னை தொலைபேசி/ தமிழ்நாடு சர்க்கிள்/ STR/ STP உள்ளிட்ட நான்கு சர்க்கிள் கள் மொத்தத்தில் ஐந்து கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதால் மார்ச் 31 க்குள் பணம் கட்டாவிட்டால் மருத்துவ திட்டத்திலிருந்து மியாட் மருத்துவமனை வெளியேறிவிடும் நிலை உள்ளது சம்பந்தமானது. குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் பாக்கியை செலுத்தினால் மட்டுமே மியாட் மருத்துவமனை வெளியேறாமல் தடுத்து நிறுத்த முடியும் என்று தோழர் சி.கே.எம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். இதன் விளைவாக 90 லட்சம் ரூபாய் நிதி இதற்கென கார்ப்பரேட் அலுவலகத்தால் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் சேர்த்து ஒரு கோடி ரூபாய் பாக்கியை அடுத்த சில நாட்களில் மியாட் மருத்துவமனைக்கு செலுத்திட சென்னை தொலைபேசி CGM நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் மியாட் போன்ற தரமான உலகதரத்திலான மருத்துவமனையில் நமது ஊழியர்கள் வழக்கம் போல மருத்துவ சிகிச்சை தொடர்ந்து பெற இயலும். நமது கோரிக்கையை உடனடியாக ஏற்று 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த நிர்வாகத்திற்கும் இப்பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறை எடுத்த CGM அவர்களுக்கும் நமது நன்றி.

No comments: