Tuesday, 26 March 2019

வரவேற்று மகிழ்கிறோம்:




பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சம்மேளனத்தின் தலைமை இன்று ( 25-03-2019) DOT செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. NFTE/FNTO சம்மேளனங்களுடன் அரசு 08-09-2000 ல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை உடனடியாக (?) அமுலாக்க வேண்டும் என அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் நிதியாதாரம் உடன்பாட்டின்படி பாதுகாக்கப்படாதது குறித்து அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் உச்சநீதிமன்றத்தில் இந்த உடன்பாட்டை அமுலாக்காது குறித்து மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள பின்னணியில் சம்மேளனத்தின் தலைமை தனது தவறை உணர்ந்து இக்கடிதத்தை எழுதியுள்ளது வரவேற்புக்கு உரியது. ஆனால் வெறுமனே கடிதம் எழுதிவிட்டு சும்மா இருந்தால் அதனால் பயனேதும் ஏற்படாது என்ற உண்மையை சம்மேளனத்தின் தலைமை‌ உணரவேண்டும். Better late than Never என்ற கண்ணோட்டத்தில் இது சரியான நடவடிக்கை தான். எது எப்படியோ சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் அதிர்ச்சி மருத்துவம் ( Shock Treatment) பயனளிக்க துவங்கி விட்டது. சம்மேளனத்தின் இந்த துரித நடவடிக்கை சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்பதில் ஐயமில்லை. வாழ்க நம் வசவாளர்கள். வளர்க நம் சம்மேளனம்.

No comments: