Tuesday, 26 March 2019

மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்:




சம்மேளன பொதுச்செயலாளர் சந்தேஷ்வர் சிங் அவர்களின் மாற்றுக் கருத்துக்களை பரிசீலனை செய்திட 25-03-2019 ல் சென்னை பூக்கடை வளாகத்தில் கூடிய சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். 35 பேரில் ஆறு பேர் தவிர்த்து 29 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மூன்றரை மணிநேரம் நடைபெற்ற விவாதத்தில் அனைவரும் பங்கேற்று கருத்து கூறினர். தமிழ்நாடு மாநிலச் சங்க பொருளாளர் சுப்பராயன் , மாநில உதவிச் செயலாளர் சண்முகம் மற்றும் மூத்த தோழர் வி.கே.ஜி. ஆகியோர் உரை நிகழ்த்தினர். முன்னதாக மாநிலச் செயலாளர் மாநிலச் செயற்குழு அடுத்தடுத்து கூட வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார். சம்மேளன பொதுச்செயலாளர் சிங் நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதில் அவசரம் காட்டத் தேவையில்லை என்று கருத்து கூறியதை எடுத்துக் கூறினார். 14-03-2019 ல் நடைபெற்ற விரிவடைந்த மாநிலச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை மறுபரிசீலனை செய்வது குறித்து தோழர்களின் கருத்துக்களை அவர் வரவேற்றார். இறுதியில் மீண்டும் மாநிலச் சங்க செயற்குழு ஏற்கனவே 14-03-19 அன்று எடுத்த முடிவினை ஒருமனதாக வலியுறுத்தியது. உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றே நமக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பை உறுதிசெய்யும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அனைத்து உதவிகளையும் ஆதரவையும் மாநிலச் சங்கத்தின் முயற்சிகளுக்கு அளிக்க கேட்டுக் கொண்டது. நாடு தழுவிய அளவில் பெரும் ஆதரவையும் வழக்கு நிதியையும் வழங்கிய அனைவருக்கும் மாநிலச் செயற்குழு நன்றி தெரிவித்தது.
Image may contain: 5 people, including Elangovan Bsnl, people sitting and indoor

No comments: