thanks

thanks
ckm thanks

Sunday, 17 March 2019

உச்ச நீதி மன்றத்தை அணுகுவதேன்?

BSNL ஊழியர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு நியாயமான முடிவு காண டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது வழக்கு தொடுக்க NFTE BSNL சென்னை மாநில சங்கம் முடிவெடுத்ததன் அடிப்படையில் டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து வருகிறோம்.
BSNL நிறுவனத்தை அமைக்கும்போது செப்டம்பர் 2000த்தில் அங்கீகரிக்கப்பட்ட NFTE, FNTO, BTEF சம்மேளனங்களிடம் அன்றைய மத்திய அரசு BSNL நிறுவனத்தை எக்காரணம் கொண்டும் செயல்பட முடியாத நலிவடைந்த நிறுவனமாக ஆக மத்திய அரசு அனுமதிக்காது என்று எழுத்துபூர்வமாக உத்திரவாதம் அளித்தது.
துரதிருஷ்டவசமாக, 2004 முதல் 2013வரை ஒரே அங்கீகாரச் சங்கமாக இருந்த BSNLEU சங்கம், மத்திய அரசு தான் அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு அதற்கு நேர் எதிராக செயல்பட்டபோது கண்டும் காணாமல் விட்டுவிட்டது. சம்மேளனங்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தில் நம்பூதிரி, அபிமன்யூ போன்றோர் பங்கேற்காத காரணத்தால் அவர்களுக்கு அந்த உடன்பாட்டின் மீது பிடிப்பு இல்லாமல் போயிற்று. ஆகவே, அந்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி அமலாக்க வைத்திடும் தார்மீக கடமையை ஆற்றிட தவறினர்.
உதாரணத்திற்கு, BSNL உருவாவதை அறிவித்து 18 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் PIB கெஜட்டில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
" மத்திய அரசின் கொள்கையான நாடெங்கும் தொலைத் தொடர்பு சேவையை விரிவாக்கும் திட்டத்தை அமலாக்கும் சிறந்த அமைப்பாக BSNL திகழப்போவதால் எக்காரணத்தைக் கொண்டும் BSNL நிறுவனத்தை நலிவுற்று செயல்பட முடியாததாக ஆக விடவே மாட்டோம் என்ற சத்தியமான உறுதியை அரசு அளிக்கிறது"
என்று தெரிவித்தது.
ஆனால், 18 வருடங்களுக்குப்பின்
BSNL நிறுவனம் நலிவடையத் துவங்கிய நிறுவனம் ( Incipient sick unit) என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்ற மாதம்வரை அம்மாதத்தின் கடைசி வேலைநாளன்று சம்பளத்தை தவறாது பெற்றுவந்த நமது ஊழியர்கள்/அதிகாரிகள் சென்ற பிப்ரவரி மாத சம்பளத்தை மார்ச் 16, 17 தேதியில் பெற்ற அவலநிலை. இனி மாதாமாதம் இந்நிலை தொடருமா என்ற கேள்விக்குறி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது இயற்கையே.
12 ஆண்டுகள் ஆனபிறகும் ஊதிய மாற்றம் எட்டாக்கனியாக உள்ளது.
BSNLEU சங்கத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டாலும் மேலும் பல காரணங்களாலும் நாம் இழந்தவற்றை மீட்க, மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வைத்திட கடைசி ஆயுதமாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளோம்.
Image may contain: 2 people, people sitting

No comments: