Friday, 15 March 2019

விரிவடைந்த மாநிலச் செயற்குழு கூட்டம்:


இன்று (14-03-19)நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.

1) மாநிலச் சங்கத்தின் ஏழாவது மாநாட்டினை அண்ணாநகரில் 2019 ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் நடத்த 15 பேரடங்கிய வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. இதன் கன்வீனராக தோழர் என்.தனபால் தேர்வானார். நான்கு மாவட்ட மாநாடுகளையும் ஆகஸ்ட் 10 க்குள் ( மாநில மாநாட்டுக்கு முன்பு) நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.

2) மத்திய அரசு 2000 செப்டம்பரில் நடைபெற்ற மகத்தான மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தின் விளைவாக NFTE/FNTO/BTEF தொழிற்சங்கங்களுக்கு அளித்த உறுதிமொழிகள்/வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறிசெயல்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுப்பது.இதற்கான நிதியை ஊழியரிடமிருந்து திரட்டுவது. முதல்கட்டமாக மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தலா ஐயாயிரம் ரூபாய் நிதி அளிக்க தீர்மானிக்கப்பட்டது. மற்றவர்கள் விருப்பப்படி நிதியளித்து உதவலாம்.இன்றைய கூட்டத்தில் ரூபாய் 85000/- நிதி வசூலானது. (வழக்கு தொடுக்கும் பணிக்காக தோழர் சி.கே.எம்.சனிக்கிழமை புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். ஒருவார காலத்தில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)

3) தமிழ்நாடு டெலிகாம் கூட்டுறவு சங்க RGB உறுப்பினர் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுவதற்காக ஏழு பேரடங்கிய‌ தேர்வுக் குழு தேர்வு செய்யப்பட்டது.இக்குழுவே தோழமை சங்கங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையையும் நடத்தும்.

4) பெருந்தலைவர் குப்தா அவர்களின் 98 வது பிறந்தநாள் விழாவை 08-04-2019 அன்று மாலை 3 மணியளவில் பூக்கடை வளாகத்தில் சிறப்பாக நடத்துவது. இவ்விழாவிற்கு அனைத்து சங்க மாநிலச் செயலாளர்களையும் அழைப்பது.

நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்ற இச்செயற்குழு கூட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற சென்னை தொலைபேசியின் தலைமை மனமகிழ் மன்ற நிர்வாகிகள் தேர்தலில் வெற்றிப் பெற்ற NFTE தோழர்கள் பாராட்டப்பட்டனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் C.வெங்கடேஷ் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு சால்வை பரிசளித்தார்.தமிழ்மாநில NFTE  சங்க உதவிச் செயலாளர் தென்காசி சண்முகம் பொருள் பொதிந்த சிறப்புரை நிகழ்த்தினார்.மாநிலத் தலைவர் M.K.ராமசாமி தலைமை ஏற்றார். மாநிலச் செயலாளர் சி.கே.எம் ஆய்படுபொருளை அறிமுகம் செய்து பேசினார். தோழர்கள் K.M. இளங்கோவன், T.R.ராஜசேகரன், V.பாபு, N.தனபால், N.V.சோமசுந்தரம், K.சபாபதி, K.வெங்கடேசன், M.நாகராஜன், K.ரகுநாதன், S.ஏகாம்பரம்,  R.ஆறுமுகம், T.சோலைராஜ் உள்ளிட்டோர் கருத்துரை நிகழ்த்தினர். பிற்பகல் 3 மணியளவில் துவங்கிய கூட்டம் மாலை 7 மணிக்கு  நிறைவுற்றது. மாநிலப் பொருளாளர் C. ரவி நன்றி நவின்றார்.
Image may contain: 5 people, including Babu Varadharaj, people smiling, people standing and outdoor
Image may contain: 14 people, including Ragul Anandhan, crowd and outdoor
Image may contain: Chandrasekaran Jayaram, crowd and outdoor
Image may contain: 10 people, including Ragul Anandhan and Nagarajan Rajan, people smiling, tree, crowd and outdoor

No comments: