Tuesday, 29 January 2019

NFTCL விழா :
காஞ்சிபுரம் மாவட்ட தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் இன்று(29-01-19) மறைமலை நகரில் நடைபெற்ற விழாவில் இரண்டு கிளைச் சங்கங்களின் இணைந்த மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநிலத் தலைவர் வீ.பாபு தலைமை வகித்தார்.  துவக்கத்தில் பெருந்தலைவர் ஓ.பி.குப்தா நினைவு கல்வெட்டு தேசிய தலைவர் ஆஷிக் அஹமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சம்மேளனத்தின் செங்கொடியை உதவிப் பொதுச் செயலாளர் எல். சுப்பராயன் ஏற்றிவைத்தார். புதிய நிர்வாகிகள் தேர்தலை பொதுச் செயலாளர் சி.கே.எம் . நடத்தி வைத்தார். தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஆனந்தன் சிறப்புரையாற்றினார். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்மேளன நிர்வாகிகள் வழங்கினார். புதிய கிளைச் செயலாளர்களாக தோழர்கள் ஏ.ரவி(செங்கற்பட்டு), அன்பழகன் ( மறைமலை நகர்) தேர்வாயினர். நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்திய காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்(பொறுப்பு) ராஜன் பாராட்டுக்கு உரியவர். NFTE-BSNL சார்பில் மாநிலச் சங்க நிர்வாகிகள் சி.ரவி, எம்.முத்துக்கருப்பன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் எஸ். ஏகாம்பரம் மற்றும் NFTCL மாநிலச் சங்க நிர்வாகிகள் ஈ.சம்பத், நாகையா உள்ளிட்ட இருநூறு தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.




Image may contain: 9 people, including Babu Varadharaj and Ragul Anandhan, people standing
Image may contain: 9 people, including Babu Varadharaj and Vijayakumar Jagannathan
Image may contain: 5 people, people standing
Image may contain: 5 people, including Babu Varadharaj, people standing
Image may contain: 5 people, people standing
Image may contain: 7 people, including Ragul Anandhan and Babu Varadharaj, people standing
Image may contain: 4 people, people standing

No comments: