Saturday, 5 January 2019

Image may contain: S Mahalingam, smiling, glasses

தொழிலாளர் வர்க்கத்தின் பிதாமகன்…

தொலைத்தொடர்பு துறையில் ஒருலட்சம் கேசுவல் மஸ்தூர்களை நிரந்தரம் செய்து
மஸ்தூர்களின் வாழ்வில் விடியலை தந்தவர்..
பொதுவுடமை இயக்கத்தின் போராளி,

பொதுத்துறைசம்பளத்தில் அரசு பென்ஷன் பெற்றுத்தந்த மாபெரும் தன்னிகரில்லா தலைவர்…

எதை தந்தும் ஒற்றுமை 
என்னையே தந்தும் ஒற்றுமை 
தொழிலாளர்களுக்காக 
தன் வாழ்வை அர்ப்பணித்தவர்

தொழிற்சங்க உலகிலே...
குப்தாவுக்கு எவரும் இணையில்லை...
சிறியோரை மேம்படுத்தினார் 
வலியோரை வசப்படுத்தினார்...

அவையத்து நம்மை முந்த வைத்தார் 
நம் அவயத்துள் என்றும் குடி கொண்டார்...

தனிவழி தவிர்த்தார்..
பொதுவழி படைத்தார்...

அவர் சொன்ன வழியில் ஒன்றுபட்டு நின்று..
அதிகாரி தொழிலாளி கைகோர்த்து இன்று...
அவர் சொன்ன பொதுவழி அல்லால்..
அல்லல் தீர புதுவழி ஏதுமில்லை இங்கு...
சிந்தனையில் சீர்மிகு சிற்பியவர்... 
சிலையாகி விட்டார்..இன்று..
சிறியன நாட்டில் நடப்பது கண்டு...
தன்னந்தனி தனிவழி தவிர்ப்போம்...
இணைந்து செல்லும் பொதுவழி புகுவோம்....
இன்னல் தீர்க்கும் பொதுமை வழி கொள்வோம்...
அதுவே.. அவருக்கு நாம் செய்யும்..
ஆகப்பெரும் அஞ்சலி.. 

No comments: