Tuesday, 1 January 2019

மாநிலச் செயலரின் புத்தாண்டு செய்தி

என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் எனது 2019 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2019 ல் அனைத்து நலத்தையும் வளத்தையும் ஒருசேர பெற்றுமகிழ வாழ்த்துகிறேன். கடந்து சென்ற 2018 ஆம் ஆண்டை என்னால் மறக்க இயலாது. ஏனெனில் அந்த ஆண்டில் தான் நான் கடந்த 40 ஆண்டாக மிகுந்த விசுவாசத்துடனும் வாஞ்சையுடனும் போற்றிவந்த கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பிலிருந்து என்னை நானே விடுவித்துக் கொண்டேன். நான் என் வாழ்வில் எடுத்த மிக கசப்பான-வேதனையான முடிவு இதுதான். கடந்த சில ஆண்டுகளாக அக்கட்சியில் அடிப்படை ஜனநாயகம் கூட  கூட மறுக்கப்பட்டது. கோஷ்டி அடிப்படையில் மட்டுமே எல்லாம் அக்கட்சியில் தீர்மானிக்கப்பட்டது. பல நல்ல- திறமை மிகுந்த தோழர்கள் கோஷ்டி சண்டையால் முடமாக்கப்பட்டார்கள். காசேதான் கடவுளடா என்பது அங்கு தத்துவமாகிவிட்டது. கார்ல் மார்க்ஸ் அங்கு வெறும் படமாகத் தான் உள்ளார். லெனினின் பாடங்களுக்கு அங்கு பாடைகட்டி பல வருடங்களாகிவிட்டது. ஊழல்- முறைகேடு அன்றாட கடமையானது. மனசாட்சி உள்ள ஒருவரும் புரட்சி நடத்துவதற்காக அக்கட்சி இயங்குவதாக நிச்சயம் சொல்ல மாட்டார்கள்.MLA/MP என ஒரு சிலரின் சுகபோகங்களுக்காக அக்கட்சி பாதை மாறி- தடம்புரண்டது. எனவே என்னை இனியும் ஏமாற்றிப் கொள்ள விரும்பாமல் விலகி விட்டேன். என்னுடைய இந்த கருத்து CPI கட்சிக்கு மட்டுமே பொருந்தாது. CPM கட்சிக்கும் மிகவும் பொருந்தும். ஏதோ தமிழ்நாடு மாநிலத்தில் மட்டுமே இப்படி என்றில்லை. இந்தியா முழுவதிலும் இதே நிலைதான்.இதே அவலம் தான். ஆனால் கார்ல் மார்க்ஸ் / விளாடிமிர் லெனின் ஆகியோரின் கோட்பாடு மீது எனக்கு நம்பிக்கை இன்றும் உள்ளது. தவறான பேர்வழிகளிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாட்டிக் கொண்டு மூச்சுத் திணறலுக்கு ஆளாகி நிற்கிறது என்று கூட வர்ணிக்கலாம். எப்படியானாலும் நாற்பதாண்டு பந்தம் முறிந்தது 2018 ல் என்ற வகையில் என் நினைவில் 2018 நிலைத்து நிற்கும். 2018 க்கு விடை கூறி 2019 ன் புதிய ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி வரவேற்கின்றேன்.வருக புத்தாண்டு!

No comments: