Thursday, 3 January 2019

புத்தாண்டு துவக்கத்தில் மகிழ்ச்சி தந்த சந்திப்பு:
இன்று (03-01-2019) மாலை சென்னையில் பூக்கடை பிஎஸ்என்எல் வளாகத்தில் உள்ள NFTE-BSNLமாநிலச் சங்க அலுவலகத்தில் அரசுப் பணியாளர், மின்சார வாரிய ஊழியர், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர், NFTCL, டாஸ்மாக் பணியாளர், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள், NFTE தொழிற்சங்க தலைவர்களின் கலந்தாலோசனை கூட்டம் பயனுள்ள வகையில் நடந்தது.2019 ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டதுடன் ஜனவரி 08/ 09 தேதிகளில் நாடுதழுவிய அளவில் நடைபெறும் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் வெற்றி அடைய ஊழியரையும், தொழிலாளரையும் ஒன்றுதிரட்டிட ஆலோசனை கலக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மூத்த தொழிற்சங்க தலைவர்கள் கு.பாலசுப்பிரமணியன், கடலூர் எம்.சேகர், சேக்கிழார் ,விருதை காந்தி, மார்க்ஸ், சி.கே.எம், பால்பாண்டி, இளங்கோவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மனநிறைவு தந்தது. கடலூரில் ஜனவரி 26/27 தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில மாநாட்டிற்கு வருகை தர வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் தோழர் கு.பா.அழைப்பு விடுத்தார். அனைவரும் அவரது அன்பான அழைப்பினை ஏற்றோம். NFTE சார்பில் தோழர் சி.கே.எம் அவர்களும் NFTCL சார்பில் தோழர் எஸ்.ஆனந்தன் அவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்பார்கள். இது போன்ற சந்திப்புகளை எதிர்காலத்திலும் தொடர தீர்மானிக்கப்பட்டது.

Image may contain: 4 people, people smiling, people sitting and indoor
Image may contain: 5 people, people smiling, people sitting and indoor
Image may contain: 4 people, people sitting and indoor
Image may contain: 6 people, people sitting and indoor

No comments: