Saturday, 29 December 2018

பொய் மெய்யாகிடக் கூடாது.

.
சென்னை பூக்கடை வளாகத்தில் இன்று(28-12-18) நடைபெற்ற ஏ.யூ.ஏ.பி. கூட்டத்தில் பேசிய SNEA மத்தியச் சங்க பொருளாளர் ராஜன் இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த NFTE- BSNL மாநிலச் செயலாளர் சி.கே.மதிவாணன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் CMD/ BSNL தொலைத் தொடர்புதுறையை ஏமாற்றுவதற்காக சொல்லி வரும் பல பொய்களில் ஒன்று தான் 58 வயதாக ஓய்வுபெறும் வயதை குறைக்கப் போவதாக CMD எழுதி இருப்பது என்றார். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்யலாம் என்பது கிராமத்தில் வழக்கில் உள்ள பழமொழி. அதைத் தான் இந்த பேச்சு நினைவு படுத்தும்.ஆனால் CMD யாரை இறுதியில் ஏமாற்றப் போகிறார் என்பது விரைவில் தெரியும்.
 ஊழியரின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து எந்த காரணம் கூறியும் நிர்வாகம் குறைக்க ஏ.யூ.ஏ.பி. ஒப்புக் கொள்ள கூடாது என்பதே நம் ஊழியரின் உறுதியான எண்ணம். அதேபோல  இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய SNEA அகில இந்திய பொருளாளர் மற்றுமொரு  உண்மையை போட்டு உடைத்தார். அதாவது 4G அலைக்கற்றை கிடைத்தால் நிறுவனத்தின் லாபமும் வருமானமும் பெருகும். அதன் பின்னர் ஊதிய மாற்றம் ஊழியர்களுக்கு எளிதாக கிடைக்கும் என்று பல தலைவர்கள் ஆசை காட்டுவது போல ஒருபோதும் நடக்கவே நடக்காது என்ற அவர் இது எல்லா தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும் என்றும் கூறினார். கேட்டவர்களுக்கு தலை சுற்றியது. கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அது வெயிலில் உருகி அதன் கண்கள் மூடிக் கொள்ளும். அச்சமயத்தில் கொக்கை எளிதாக பிடித்து விடலாம் என்று ஊழியரிடம் கதை சொல்லும் தலைவர்கள் குட்டு இவ்வாறு அம்பலமானது இன்றைய கூட்டத்தின் சிறப்பு அம்சம்.


No comments: