Thursday, 8 November 2018


இன்று (07-11-18 ) நிர்வாகத்துடன் NFTE மாநிலச் சங்கத்தின் வழக்கமான ( புதன் கிழமை) சந்திப்பு நடைபெற்றது. DGM( HR), AGM(A) , SDE( SR) உள்ளிட்டோர் பங்கேற்றனர் .நம் சங்கத்தின் சார்பில் தோழர்கள் சி.கே.எம், இளங்கோவன், ராஜேந்திரன், நாகராஜன், ஆறுமுகம் பங்கேற்றனர். பல பழைய மற்றும் புதிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.முக்கியமாக குறிப்பிட விரும்புவது மாம்பலம் புறப்பகுதியில் பணிபுரியும் தோழர் பிரபு , T.T. அவர்களின் பதவி உயர்வு பிரச்சினை. கடந்த 14 ஆண்டுகளாக அவருக்கு எந்த பதவி உயர்வும் தரப்படவில்லை. NEPP பதவிஉயர்வு திட்டத்தில் தொடர்ந்து நான்கு முறை" சராசரி " என்று சர்வீஸ் புத்தகத்தில் மேலதிகாரி ஒரு ஊழியரின் சேவைத் திறன் குறித்து பதிவிட்டு விட்டால் அந்த ஊழியருக்கு பதவி உயர்வு கிட்டாது.
இந்த பதிவு எப்போதுமே பெரும்பாலும் உண்மையற்றதாகவே இருக்கும்.சம்பந்தபட்ட அதிகாரி தன் விருப்பு - வெறுப்பு அடிப்படையில் தான் ஊழியரின் சேவைத் திறன் குறித்து சர்வீஸ் புத்தகத்தில் பதிவிடுவது இங்கே வாடிக்கை.நியாயமின்றி தோழர் பிரபுவுக்கு நீண்டகாலமாக பதவி உயர்வு மறுக்கப்பட்டது.இவருக்கு பதவி உயர்வு தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என நமது மாநிலச் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. இதன் விளைவாக இன்று அவருக்கு இரு பதவி உயர்வுகள் வழங்கி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவு நகல் மாநிலச் செயலாளரிடம் DGM( HR) இன்றைய கூட்டத்தில் ஒப்படைத்த போது அவர் அதனை தனக்கு கிட்டிய தீபாவளி பரிசாக வர்ணித்தார்.நிச்சயமாக தோழர் பிரபு இச்செய்தி அறிந்து மகிழ்ந்திருப்பார் என்று எண்ணுகின்றேன்.பல ஆண்டுகளாக நீடித்த ஒரு அநீதி அந்த தோழருக்கு இன்று களையப் பட்டதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு.

No comments: