Monday, 29 October 2018

NFTCL மற்றும் NFTE நிர்வாகிகளுடன் தோழர் சி.கே.எம். கலந்தாலோசனை:

இன்று (27-10-18)பூக்கடை சங்க அலுவலகத்தில் NFTCL தமிழ்நாடு மாநில தலைவர் பாபு, மாநில செயலாளர் ஆனந்தன், மாநில துணைச் செயலாளர் ரவி , காஞ்சிபுரம் மாவட்டத்தின் செயலாளர் மகேந்திரன் , கடலூர் மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் NFTE மாநிலப் பொருளாளர் ரவி , காஞ்சிபுரம் மாவட்டத்தின் செயலாளர் ஏகாம்பரம் உள்ளிட்டவர்களிடம் கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்தினார்.
1. தீபாவளிக்கு முன்பு அனைத்து ஒப்பந்த தொழிலாளரும் ஏழாயிரம் ரூபாய் போனஸ் பெற்றிட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
2. நவம்பர் 29 ல் கேளம்பாக்கத்தில் நடக்கவுள்ள NFTCL தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டிய ஏற்பாடுகள்.
3. AUABஅறைகூவியுள்ள இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட முன்முயற்சிகள்.
4. புதுடெல்லியில் நடைபெறவுள்ள
NFTCL அகில இந்திய மாநாடு
பின்னர் சமீபத்தில் ஹரித்வாரில் நடந்துமுடிந்த NFTE தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார்.
சென்னை தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளர் அவர்களிடம் தொலைபேசி மூலம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பு போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினார் தவறும் பட்சத்தில் போராட்டம் தவிர்க்க முடியாது என்றும் CGM அவர்களிடம் கூறினார்.. மல்லி செக்யூரிட்டி நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் சென்னையில் சில பகுதிகளில் போனஸ் இன்றுவரை வழங்காததை சுட்டிக் காட்டி அந்த நிறுவனத்தின் மேனேஜருடன் தொலைபேசி மூலம் பேசினார். எதிர்வரும் திங்கட்கிழமை போனஸ் வழங்க உறுதி கூறப்பட்டுள்ளது. இல்லையெனில் திட்டமிட்டப்படி
கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Image may contain: 7 people, including Kothandapani Saminathan, people standing, people sitting and indoor
Image may contain: 5 people, including Babu Varadharaj and Ragul Anandhan, people sitting, people standing and indoor

No comments: