Wednesday, 3 October 2018

Image result for advise

தோழர்களே, சில நாட்களாக  நமது  BSNL  வருமானம் மிகவும் கவலைப்படுபடி குறைந்துவருவது அனைவருக்கும் கவலை அளிக்கிறது. 

சுமார் 28% வருமானம் சென்ற வருடத்தை ஒப்பிடும்போது குறைந்துள்ளது. அனைவரும் தலைமை நிர்வாக இயக்குனர் உட்பட அனாவசிய  செலவை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அயல்நாட்டு பயணச் செலவுகளை நமது நிர்வாகத்தின் பெரிய அதிகாரிகள் குறைக்கவேண்டும். 

ஆனால் அவர்கள் ஊருக்குத்தான் உபதேசம் தவிர தனக்கில்லை என்ற மனோநிலையிலேயே இருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறேன்.


1.   அண்மையில் நடைபெற்ற ஆசிய கப் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது அனைவரும் அறிவர். இதற்கு நமது நிறுவனம் BSNL ஸ்பான்சர் செய்துள்ளது. இதனை பார்ப்பதற்காக ஆறுக்கும் மேற்பட்ட நமது டைரக்டர்கள் துபாய்க்கு பிஸினஸ் வகுப்பில் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


2.   அண்மையில் அனைத்து மாநிலத் தலைமைகளை உள்ளடக்கிய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. “BSNL உங்கள் வாசல்படியில் சேவை தரும்” என்ற நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கம் மிக மிக அதிக கட்டணம் கொண்ட்து அதுமட்டுமல்ல அங்கு ஏற்பாடு செய்த உணவு வகைகள் ஆகப்பெரும் செல்வந்தர்கள் சாப்பிட கூடியது 

தோழர்களே. இதற்காக நமது நிறுவனம் செலவழித்த தொகை கோடிகளைத் தாண்டும்.

இதுபோன்ற செலவினங்களை குறைத்தாலே போதும்..அதை விட்டு விட்டு சாதாரண தொழிலாளர்களின் மருத்துவ செலவு,   LTC போன்றவற்றை தருவதற்கு பணம் இல்லை என்று மறுத்துள்ளது. இது நியாயமா!!

அதுமட்டுமல்ல தோழர்களே, அடிமட்ட காசுவல் லேபர், ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நேரத்தை குறைத்து உத்திரவு வெளியிட்டு உள்ளது.
 01-01-2016 முதல் . Poor TSM/ Casual Labourers சம்பளம் 7வது சம்பளகமிஷன் உத்தரவுபடி இன்றுவரை மாற்றி அமைக்கப்படவில்லை.


ஓய்வு ஊதியர் குடும்பங்களுக்கு வழங்கப்படும்

 குடும்ப பென்ஷன் இன்னும் 3000 இலிருந்து

 9000-ஆக மாற்றப்படவில்லை. இந்த பென்ஷன்

 மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றப்பட்டு 

வருடங்கள் ஆகிறது.


சில நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்த்து நமக்கு கிடைத்த மற்றொரு அதிர்ச்சி செய்தி…….

நமது மதிப்பிற்குரிய அமைச்சர் மனோஜ் சின்ஹா நமக்கு மூன்றாவது உதிய குழு அமைக்க தரப்படும் .அமைச்சரவைக்கான  DOT குறிப்பினை note for relaxation for Third Pay/ Wage revision to BSNL இப்போதைக்கு தயார் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தகவல்.

இதுபோன்ற சூழலில் நமது நிர்வாகம் தண்ணீரை போல தேவையற்ற செயல்களுக்கு பணத்தை செலவு செய்யும் போக்கினை கண்டிக்கிறோம். ஆனால் இந்த கண்டனத்தை வெளியிட வேண்டிய அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் ((Unions and Associations ( AUAB )))வேண்டுமென்றே மவுனம் காப்பததின் காரணம் என்ன?????????



தோழமையுள்ள


சி.கே.மதிவாணன்

மாநிலச் செயலர்

சென்னை தொலைபேசி NFTE-BSNL

03-10-2018

No comments: