இன்று குரோம்பேட்டை கோட்ட மாநாடு தலைவர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் ஆரம்ப நிகழ்ச்சியாக தோழியர்.செல்வி நமது சங்க கொடியினை விண் அதிரும் கோசங்களுடன் ஏற்றி வைத்தார்.
மாநாட்டின் துவக்க உரை தோழர்.ஏகாம்பரம் மாவட்டச் செயலர் நிகழ்த்தினார். ஆண்டறிக்கையினை கோட்டச் செயலர் சத்யா அனைவரின் ஆதரவோடு சமர்ப்பித்தார். மாவட்டச் தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஏழுமலை, செல்வராஜ், இளங்கோவன், ரவி,தலைவர்.,ராமசாமி, NFTCL மாவட்டச் செயலர் மகேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர்.சி.கே.மதிவாணன் சிறப்புரை ஆற்றி புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்தார்.
அவர் பேசும்போது இன்றைய புதிய ஊதிய பேச்சு வார்த்தை நிகழ்வுகளையும் BSNL இன்றைய நிலைக்கு காரணம் என்பது பற்றி விளக்கிப்பேசினார். BSNLEU அங்கீகார காலத்தில் படிப்படியாக நிலை குலைந்த நமது நிர்வாகத்தினை எதிர்த்து ஒரு போராட்டமும் நடத்தாமல் வாய் மூடி மெளனமாக இருந்த நிலையினை சுட்டிக்காட்டினார்.
இன்றைய தேவை அனைவரும் நமது இலாகா நொடிந்துவிடாமல் இருக்க ஒன்றிணைந்து மோடி அரசினை தட்டிக் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் எனக் கூறினார்.
புதிய கோட்டச் செயலராக திரும்பவும் சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுமார் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








No comments:
Post a Comment