Tuesday, 30 October 2018

பகல் கொள்ளை ?

2000 அக்டோபரில் அப்போது இருந்த தொலைத் தொடர்பு சேவைத் துறையை ( Department of Telecom services) உருமாற்றம் செய்து பிஎஸ்என்எல் நிறுவனமாக மாற்றம் செய்தது வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு. ஆனால் பதினெட்டு ஆண்டுகள் கழிந்த பின் இன்றுவரை DTS ன் சகல சொத்துக்களையும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் மாற்றம் செய்து தராமல் மத்திய அரசு தன் வசமே வைத்துள்ளது. தற்போது அந்த சொத்துக்கள் இந்திய ஜனாதிபதியின் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் DTS ன் சொத்துக்களை ஒப்படைக்காமல் ஏமாற்றுவது மாபெரும் அநியாயம் ஆகும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மத்திய அரசு ஜனாதிபதியின் பெயரில் இருப்பதாக கூறப்படும் DTS ன் சொத்துக்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வரியை ( Property fax ) செலுத்தும் பொறுப்பை அநியாயமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் நாடுமுழுவதும் தலையில் நிர்ப்பந்தமாக ஏற்றிவிட்டது. இந்த ஒரு வகையில் மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனம் ஆண்டுதோறும் பல ஆயிரங்கோடி ரூபாயை தேவையின்றி கடந்த 18 ஆண்டாக செலவழித்து வருகிறது.தனக்கு நியாயமாகவும் சட்டப்படியும் வந்திருக்க வேண்டிய சொத்துக்களை 18 ஆண்டுகளாக கோட்டை விட்டது பிஎஸ்என்எல் நிறுவனம் . அதே நேரத்தில் தன் வசமே இல்லாத சொத்துக்களுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வரியென தவறாக செலுத்தி வருகிறது.இந்த மோசடிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கி விட்டது

No comments: