Thursday, 25 October 2018

இரண்டாம் நாள் செயற்குழு--- தோழர்.மதிவாணன் உரை வீச்சு

தோழர்.மதிவாணன் ஹரித்துவார் செயற்குழுவில் சுமார் ஒரு மணிநேரம் நமது பிரச்சனைகள் குறித்து பேசினார்.

‘அனைத்து தலைவர்களும் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க உறுதியான மற்றும் காலவரையற்ற வேலைநிறுத்த அறைகூவல் விட வேண்டும். அதே சமயத்தில் நிர்வாகத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்க முயலவேண்டும்.

நமது நிதிநிலைமையை சமாளிக்க அரசு உதவிபுரிய வேண்டும். இதற்கான உடன்பாட்டில் அன்று 2000-இல் அரசு ஒத்துக்கொண்டது. அப்படி இல்லையென்றால் பழையபடி நம்மை அரசு ஊழியராக தொலைதொடர்பு துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

ITS ஆபிசர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் புதிய சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் நமது  ஊழியர்களுக்கு புதிய சம்பளம் இன்றுவரை வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்க தேவைபடும் Affordability condition/ Clause இன்னும் வழங்கப்படவில்லை. மேலும் போனஸ் பெறுவதைப் பற்றி BSNLEU  எந்த விருப்பத்தையும் காட்டவில்லை. அதற்கான ஆயத்த கூட்டத்தை NFTE உடன் சேர்ந்து அமைக்கவும் தயாரில்லை. தீபாவளி நெருங்கிவிட்டது ஆனால் தோழர்.அபிமன்யூ லாபம் ஈட்டாத எந்த பொதுத்துறை நிறுவனமும் போனஸ் கிடைக்காது என்ற வதந்தியை/செய்தியை பரப்புவதில் குறியாக இருக்கிரார் என்பதே உண்மை. இந்த சூழ்நிலையில் நமது NFTE சங்கம் குறைந்தபட்ச போனஸை பெற அதுவும் தீபாவளிக்குமுன் பெற முயற்சி செய்ய வேண்டும்.

அதேபோல நமது அலவன்ஸ்களை முடக்க நிர்வாகம் முனையுமானால் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். அதேபோல நமது சகோதர சங்கம்  FNTO  சங்கத்தை வரும் தேர்தலில் நமது கூட்டணியில் இணைத்துக் கொண்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும்.
Image may contain: 2 people

No comments: