Thursday, 6 September 2018


NFTE- BSNL  சென்னை தொலைபேசி மாநிலத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மாநிலத்துணைத் தலைவர் S.C. போஸ் தலைமையில் நடைபெற்றது.தோழர்.ப்ரேம் திவாரி மாவட்டச்செயலர் இந்தூர் (ம.பி) அவரது மனைவி டாக்டர்.மஞ்சுளா திவாரி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இருவரும் மாநிலச் சங்கத்தால் மரியாதை செய்யப்பட்டனர்.

 

தோழர்.இளங்கோவன் மாநில உதவிச் செயலர் ஊழியர் உபரி பகிர்ந்தளிப்பு பிரச்சனையில் இருசங்கங்கள் நிர்வாகத்தோடு நடத்திய பேச்சுவார்த்தை விபரங்களை தெரிவித்தார்.

 

தோழர்.மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் அவர்கள் பேசும்போது நடக்க இருக்கும் ஹரித்துவார் அகில இந்திய செயற்குழு பற்றியும் மூன்றாவது சம்பளப் பேச்சுவார்த்தை தற்போதய நிலைமை பற்றியும் பேசினார்.

 

அனைவரும் இந்த மாதம் ஓய்வுபெற இருக்கும் மாநில அமைப்பு செயலர் வெங்கடராஜ் அவர்களின் பிரிவு உபசார விழாவில் 28-09-18 அண்ணாசாலை இணைப்பகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

சில கோட்டங்களின் வேண்டுகோளுக்கிணங்க கோட்ட மாநாட்டு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. கேரளா வெள்ள நிவாரண நிதி நேரடியாக கேரள முதல் அமைச்சரின் நிவாரண நிதியில் சேர்க்கப்பட வேண்டும் அது பிரதம மந்திரி நிவாரணநிதி மூலமாக போக்க்கூடாது என்ற அனைவரது கருத்தும் அகில இந்திய சங்கத்திற்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

 

இதற்கு நேரடியாக பிரதம மந்திரி நிவாரண நிதிக்கோ மத்திய சங்கம் மூலமாகவோ அளிக்க உறுப்பினர்கள் விரும்பவில்லை மேலும் சென்னை தொலைபேசி சார்பாக ரூ.1 லட்சம் திரட்டி தரப்படும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து மாநிலச் சங்கம் தனது நிலைபாட்டினை அகில இந்திய சங்கத்திற்கு 20-09-18-க்கு முன் தெரிவிப்பதன்மூலம் சம்பளத்திலிந்து பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுகம் கோட்டச் செயலர் சோலைராஜ் நன்றி கூறி கூட்டத்தினை முடித்து வைத்தார்
Image may contain: 1 person, sitting, crowd, tree and outdoor
Image may contain: 8 people, people sitting and outdoor
Image may contain: 6 people, including Elangovan Bsnl, people smiling, people sitting, tree and outdoor
Image may contain: 5 people, people smiling, outdoor
Image may contain: 10 people, including Vijayakumar Jagannathan, Nftcl Ckm and Babu Varadharaj, people smiling, people standing and outdoor
Image may contain: 10 people, including Babu Varadharaj and Ram Prabu, people smiling, people standing and outdoor
Image may contain: 7 people, people sitting and outdoor
Image may contain: 10 people, including Ragul Anandhan, people smiling, crowd and outdoor
Image may contain: 7 people, people sitting and outdoor
Image may contain: 15 people, including Nagarajan Rajan and Ragul Anandhan, people sitting, tree and outdoor
Image may contain: 7 people, including Ragul Anandhan, people standing, tree and outdoor
Image may contain: 12 people, including Nagarajan Rajan, crowd and outdoor
Image may contain: 12 people, outdoor


No comments: