Sunday, 2 September 2018

மூன்றாவது ஊதிய மாற்றமும்...மூன்றாவது கூட்டமும்


BSNL ஊழியர்களுக்கான மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான இருதரப்புக்குழுவின் மூன்றாவது கூட்டம்27/08/2018 அன்று டெல்லியில் நடைபெற்றது.ஏற்கனவே ஊழியர் தரப்பு தங்களது எதிர்பார்ப்பு ஊதிய விகிதங்களை நிர்வாகத்திடம் அளித்திருந்தது.


NE-I எனப்படும் GROUP D ஊழியர்களின் தற்போதைய சம்பள விகிதமான ரூ.7760 -13200 என்பது ரூ.19590 – 69800 என உயர்த்தப்பட வேண்டும் என்பது ஊழியர் தரப்பு கோரிக்கை.ஆனால் 27/08/2018 கூட்டத்தில்நிர்வாகம் GROUP D ஊழியர்களின் அடிப்படைச்சம்பளத்தைரூ.7760/=லிருந்து ரூ.18600/= என்று உயர்த்த இசைவு தெரிவித்திருந்தது.


இது ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சுட்டிக்காட்டிய ஊழியர் தரப்பு  குறைந்த பட்ச அடிப்படை ஊதியம்ரூ.19000/= என உயர்த்தப்பட வேண்டும் என உறுதியாக வலியுறுத்தியுள்ளது. நிர்வாகம் மீண்டும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவதைப் போலவே  அதிகபட்ச ஊதியத்தை MAXIMUM உயர்த்தவும்நிர்வாகம் தயக்கம் காட்டுகின்றது.மூன்று கூட்டங்கள் முடிவுற்ற நிலையில்முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.


அடுத்த கூட்டம் 10/09/2018ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஊதிய மாற்ற நிகழ்வு நத்தை வேகத்தில் நகர்வதாகஊழியர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.அடுத்த கூட்டத்திலாவது ஊதிய விகிதங்கள்இழுத்தடிக்கப்படாமல் இறுதிப்படுத்தப்படும் என நம்புவோம்


No comments: