72ND

72ND
HAPPY INDEPENDENCE DAY

Saturday, 4 August 2018

மாநிலச் செயலரின் செய்தி::::

Very good morning Comrade. அனைவருக்கும் காலை வணக்கம். இப்பொழுதுதான் நான் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப்பெற்றேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த மடல்...

 NFTE சென்னை மாநிலச் சங்கம் தோழர்.அன்பு டெலிகாம் மெகானிக் கூடுவாஞ்சேரி, தவறான காரணங்களால் ஒன்பது வருடம் வேலைபறிப்பு பிரச்சனையை எடுத்து அவருக்காக போராடியது அனைவரும் அறிவர். அவர் டிஸ்மிஸ் ஆவதற்கு முன்னால் 3 வருடங்கள் சஸ்பென்சன் செய்யபட்டிருந்தார்.  மொத்தமாக 12 வருடம் அவர் இலாக சர்வீஸில் இல்லை. சென்னை நீதிமன்றம் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து மூன்று வருடம் ஆகியும் நிர்வாகம் அவரை திரும்பவும் வேலைக்கு எடுக்காமல் இருந்தது 

ஆகவே, இந்த பிரச்சனையை நாம் தலைமை பொதுமேலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். பிறகு நமது அகில இந்திய சங்கத்தின் உதவியால் டெல்லியில் உள்ள டைரக்டர் (நிர்வாகம்) அவர்கள் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். ஆனாலும், தொலைதொடர்பு இலாகா அவரை திரும்பவும் பணியில் அமர்த்தவில்லை. நம்முடைய தொடர்ந்த முயற்சியின் காரணமாக பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால் அவர் அடுத்த நாளே இதயநோய் காரணமாக மருத்துவமனையில்  BSNLMRS திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டார்.


 அவர் திரும்பவும் வேலைக்கு எடுத்து கொள்ளப்பட்டும் நமது மாநிலச் சங்கம் வாளா இருக்கவில்லை. பன்னிரண்டு வருடத்திற்கான முழுசம்பளமும் தோழர்.அன்புவிற்கு தரப்பட வேண்டும் அவரது பணியில்லா நாட்கள் முழுவதும் பணியில் இருந்த நாட்களாக கருதப்படவேண்டும், அந்த காலங்கள் இன்கிரிமெண்ட், பென்சன் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைகளையும் முனெடுத்தது.


 நிர்வாகம் அவருக்கு முழு பன்னிரண்டு வருடத்தையும் கணக்கில் எடுக்க தயக்கம் காட்டியது. நாம் சும்மா இருக்கவில்லை.தொடர்ந்த்து சந்தர்ப்பம கிடைக்கும் போதெல்லாம் நிர்வாகத்திடம் பேசிக் கொண்டே இருந்தோம். நீதிமன்றமும் அவரை முழுகுற்றவாளி இல்லை தீர்ப்பளித்து வழக்கிலிருந்து விடுவித்தோடு மட்டுமல்லாமல் அவர் பன்னிரண்டு வருடத்தை அனைத்திற்கும் எடுத்து கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.  நிர்வாகம் அவர் சஸ்பென்சனில் இருந்த மூன்று வருடம் முழுச்சம்பளமும் தவிர்த்து மற்ற நாட்களூக்கு (அதாவது 9 வருடத்திற்கு) 25% சம்பளம் மற்றும் அனைத்து வசதிகளையும் தர ஒப்புக்கொண்டு ஆணை பிறப்பித்தது

இதுவரை இந்த விசயத்தில் நமக்கு கிடைத்த வெற்றிபற்றி மகிழ்ச்சி என்றாலும் ஒன்பது வருடத்திற்கும் முழுச்சம்பளம் பெற நமது சங்கம் தொடர்ந்த முயற்சி எடுத்துவருகிறது. 

நம்முடைய .NFTE சென்னை மாநிலச் சங்கத்தின் முழு முயற்சியால் இந்த வெற்றிகனியை நாம் பறித்திருக்கிறோம். தோழரது பன்னிரண்டு வருடம் கணக்கில் எடுத்து கொண்டுள்ளது நமது முயற்சியின் முழுபலன் ஆகும். இதற்கு ஒத்துழைத்த நமது அகில இந்திய சங்கத்திற்கும் நமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

நேற்று பொதுமேலாளர் (மேற்கு) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்புவின் பாதிப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது என்ற தகவலை தெரிவித்தார். .அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்த மடல். நமது சங்கம் எல்லா சங்கங்களையும் போல் வாளா இருக்காது எடுத்த பிரச்சனையை நல்லபடியாக முடிக்கும்வரை ஓயாது என்பதற்கு தோழர்.அன்புவின் கேஸ் ஒரு உதாரணம் ஆகும்.. . 


Long Live NFTE.

No comments: