72ND

72ND
HAPPY INDEPENDENCE DAY

Wednesday, 1 August 2018

தலைமை செயலக கூட்டம் 31-07-2018

:
மூன்றுநாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை பற்றி விவாதிக்க சென்னை தொலைபேசி மாநில தலைமை செயலக கூட்டம் தோழர்.ராமசாமி மாநிலத் தலைவர் தலைமையில் 31-07-2018 அன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மூன்றாவது ஊதிய குழுவில் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. நமது மாநிலச் செயலரோடு பதினாறு தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

நம்முடைய அழைப்பின்பேரில் தமிழ் மாநில பொருளாளர் தோழர்.சுப்பராயன் கலந்து கொண்டு அவர்களது மாநிலச் சங்கக் கூட்டத்தில் சமபள குழுபற்றி நடைபெற்ற விவாதங்களை விளக்கிப்பேசினார்.
Image may contain: 4 people, including Subbarayan Lakshman, people sitting, table and indoor
Image may contain: 5 people, including Subbarayan Lakshman, people sitting, table and indoor
Image may contain: 6 people, including Arumugam Rathinam, people sitting and indoor
Image may contain: 4 people, including Babu Varadharaj, people sitting
Image may contain: 5 people, people sitting

கூட்டத்தில் இதுபற்றி எடுக்கப்பட்ட ஆலோசனைகள் டெல்லியில் நடைபெறும் துணைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. தோழர்.மதிவாணன், இளங்கோவன்,வெங்கடேசன்,சோலைராஜ்,ஏகாம்பரம்,ரவி மற்றும் போஸ் ஆகியோர் கூறிய புதிய கருத்துகள் ஆலோசனைகள் தோழர்.மதிவாணன் வரும் ஆகஸ்ட் 2  டெல்லி கூட்டத்தில் விவாதிக்க எடுத்துச் செல்வாதாகத் தெரிவித்தார். 

உபரி ஊழியர்கள் பகிர்ந்தளிப்பு விஷயமாக வரும் 9-8-2018 கூட இருக்கும் நிர்வாகக் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கும் கருத்துக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.நான்கு உட் குழுக்கள் (ஒவ்வொன்றிலும் மூவர் என) பொதுமேலாளர்கள் பகுதி ஒவ்வொன்றினைபற்றியும் (GM level for North/ Central/ West/ South areas.) விவரங்கள் திரட்டப்படும். 

தோழர்.ரவி நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது.




No comments: