Monday, 9 July 2018

TSM நிரந்தரம். NFTE தனது முயற்சியை மீண்டும் துவக்கியது.

NFTE ( CHQ) 3000TSMs  பணிநிரந்தரம் ஆக்கப்பட வேண்டும் என்ற முயற்சியை திரும்பவும் தொடங்கியது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை தவறாக பயன்படுத்தி தற்காலிக ஊழியரை நிரந்தரம் ஆக்கும் பிரச்சனையை மூடுவிழா செய்த நமது நிர்வாகத்தின் முடிவினை எதிர்த்து நமது சங்கம் நிரந்தரம் ஆக்குவதற்கான முயற்சியை திரும்பவும் தொடங்கியுள்ளது. இதற்காக தோழர்.மதிவாணன் அவர்களுடன் தலைமை சங்க நிர்வாகிகள் மூத்த பொதுமேலாளர் ( Estt) அவர்களை அண்மையில் சந்தித்து பேசியதன் அடிப்படையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஒன்பது வருடங்களாக தனிஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்று மார் தட்டிய BSNLEU அங்கீரிககபட்டு இருந்த காலத்தில்தான் மூடுவிழா நடந்தது. இப்போது அவர்களை நிரந்தரம் ஆக்காமல் விடமாட்டோம் என்ற ,முன் முயற்சியினை தொழிலாளிகளின் சங்கமான நமது சங்கம்  NFTE தொடங்கியுள்ளது. .லட்சக்கணக்கான கேசுவல் ஊழியர்களை நிரந்தரம் ஆக்கிய குப்தாவின் வழிவந்த நமது சங்கம் மட்டுமே ப 3000 நிரந்தம் இல்லா TSMs  -களை நிரந்தரம் ஆக்கும். வெற்றி நிச்சயம்!!.
No automatic alt text available.

No comments: