இந்த மாத சங்கமுழக்கம்

இந்த மாத சங்கமுழக்கம்
அட்டை படம்

Tuesday, 3 July 2018

NFTE-BSNL தற்காலிக நிலை மஸ்தூர்கள் பற்றிய டெல்லி பேச்சு வார்த்தை


டெல்லியில் நடைபெற்ற மாநிலச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நமது தலைவர்கள் சி.கே.மதிவாணன்,  சி.சிங் மற்றும் அஸக் முகமது மூவரும் இன்று பொதுமேலாளர் ( Establishment) திரு தியாகி அவர்களை காப்பரேட் அலுவலகத்தில் சந்தித்தனர்.

அவர்கள் சந்திப்பின்போது இதுவரை நிரந்தரம் செய்யப்படாத 3000 தற்காலிக மஸ்தூர்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை மேற்கோள் காட்டி உடனடியாக மஸ்தூர்கள் விஷயத்தில் அது அமுல்படுத்திட வலியுறுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளியான நாளில் இருந்து அனைத்து தற்காலிக நிலை மஸ்தூர்கள் நிரந்தரம்செய்யப்படவேண்டும். ஆனால் நமது நிர்வாகம் 10 வருடம் சேவை செய்த மஸ்தூர்களை கூட நிரந்தரம் செய்ய மறுத்து விட்டது . நமது உறுதியான நிலைபாட்டினை கண்ட பொதுமேலாளர் (( Estt) திரும்பவும் அந்த ஊழியர்களின் நிலை குறித்த முடிவினை மறுபரீசலனை செய்வதாக உறுதி அளித்தார்.

நாம் மீதம்இருக்கின்ற  அந்த 3000 TSM-களை நிரந்தரம் செய்யும்வரை ஓயமாட்டோம்.

Image result for fight till end


No comments: