Sunday, 8 July 2018

தோழர் DG -யின் முதலாண்டு நினைவு நாள்

...
தோழர் டி.ஜி என்று நம் எல்லோராலும் அழைக்கப்படும் தோழர் ஞானையாவின் நினைவு நாள் இன்று (08-07-18). தனது மாணவப் பருவத்திலிருந்து இறுதிக்காலம் வரை கம்யூனிச
சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்து  வாழ்நாளில் ஆகப் பெரும் பகுதியை அதற்காகச் செல விட்டவர். தபால் தந்தியில் இன்று எண்ணற்றவர்கள் அமைப்புரீதியாக கம்யூனிஸ்ட் களாகச்(CPI) செயல்படுகிறார்கள் என்றால்அதற்கான அடித்தளத்தைத் தமிழகத்தில்அமைத்துத் தந்தவர் தோழர் ஞானையா என்றால்அது மிகையாகாது. கட்சிப் பணிக்கு முழுநேரமாக வருவதற்கு முன் சம்மேளனச் செயலர் அளவுக்கு NFPTE-ல் தொழிற்சங்கத்தில் உச்சம் தொட்டவர்.பல வேலை நிறுத்தங்களைத் தலைமை தாங்கி நடத்தி அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். சிறை சென்றவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து சாதனைகள் பல புரிய உதவியவர். எண்ணற்ற கட்சி வகுப்புகளில் ஆசிரியராக இருந்து மார்க்சிய மற்றும் அரசியல் ஞானத்தை ஊட்டியவர். இவருக்குப் பின் தபால் தந்தியில் சிறப்பு இரண்டின் மாவட்டக் கட்சிக்கு செயலாளராக தோழர் சிகே மதிவாணனை பரிந்துரைத்தவர். எண்ணற்ற புத்தகங்களை தனது இறுதி மூச்சுவரை எழுதிக் குவித்தவர்.. நெஞ்சிருக்கும்வரை அவரின் நினைவுகள் நம்முள் நிலைத்திருக்கும்!

Image may contain: 3 people, including Nftcl Ckm, people smiling

No comments: