Thursday, 26 July 2018

தேவையற்ற சர்ச்சை:Image result for controversy


அனைத்து சங்கங்கங்களின் மூன்று நாள் தொடர் பட்டினிப் போர் இன்றுடன் 26-07-2018 வெற்றிகரமாக முடிவடைந்தது. சுமார் 350 க்கும் மேற்பட்ட தோழர்கள் மிக உற்சாகமாக கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள். இன்றைய போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் NFTE – BSNL அகிலஇந்தியஉதவித்  தலைவர் தோழர்.சி.கே.மதிவாணன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, NFTCL, TEPU CCWF and PEWA  தலைவர்கள் கலந்து கொண்டனர் எப்போதும்போல BSNLEU இந்த ஒன்றுபட்ட போராட்டத்தின் பலனை அப்படியே கவ்வி சென்றிட நினைத்து தப்பும்தவறுமாக சில தகவல்களைபேசத் தொடங்கினார் BSNLEU மாநிலச் செயலர் கன்னியப்பன் . தலைவர் என்ற முறையில் மதிவாணன் குறிக்கிட்டு ”இதுபோன்ற தவறான தகவல்களை சொல்வதை நிறுத்துங்கள்” என்று கூறினார்.


BSNLEU மாநிலச் செயலர் கன்னியப்பன் ”தோழர் நம்பூதிரி மற்றும் ஜோகி இவர்கள்தான் இன்று அனைத்து சங்கங்களின் ஒற்றுமைக்கு காரணம்” என்று கூறினார். அவர்  NFTE சங்கத்தலைமையை குறை கூறியது மட்டுமன்றி இன்று பொதுத்துறை ஆனதற்கே காரணமே NFTE தலைமை பொதுத்துறைக்கு மாறியதை ஏற்றுக்கொண்டதே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று பேசினார். 

அதுமட்டுமல்லாமல் தோழர்.நம்பூதிரி அனைத்து சங்கங்களையும் 2002 முதல் ஊதிய பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றார் என்ற அண்டபுளூகை அவிழ்த்துவிட்டார். அவரது மொத்த பேச்சும் வருகின்ற சரிபார்ப்பு தேர்தலை குறிவைத்தே இருந்தது. இந்த உணர்ச்ச்சியற்ற மற்றும் பொறுப்பில்லாத பேச்சினை யாரும் (அவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட) ரசிக்கவில்லை என்பது நன்றாக தெரிந்தது.


இதற்கு பதிலளித்து தோழர் மதிவாணன் பேசும்போது பொது மேடையே தயவு செய்து BSNLEU தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்ற வேண்டுகோளைவிடுத்தார்.
அவர் கூறிய சில செய்திகளுக்கு விளக்கமும் அளித்தார்.


1.  தொலைதொடர்பு இலாகாவில் இருந்தபோதும் பிறகு பொதுத்துறைக்கு மாறியபோதும் தோழர்.குப்தா மட்டுமே ஒற்றுமையை கட்டினார்.  வரலாற்று சிறப்புமிக்க பென்சன் போராட்டம் 2000 நடந்தபோது அதனை காட்டிக் கொடுத்தவர்கள் நம்பூதிர்/ராமன்குட்டி கும்பல். 21 நாட்கள் போராட்டம் நடந்தபோது கூட அவர்கள் முதல் 8 நாட்கள் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்பதை அனைவரும் அறிவர். அப்போது மந்திரி உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பங்கெடுக்கவில்லை. 

அவர்கள் துறைசாரா ஊழியர்கள் சங்கம், NFTE மற்றும் தற்போது ஓய்வுபெறும் ஊழியர் சங்கம் இவற்றை உடைப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிவர். இது (பிரித்தாளும் சூழ்ச்சி) அவர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இன்று ஒற்றுமையை கட்டிக்காப்பது நாங்களே என்று கூறுவதை கேட்ட அனைவரும் அவர்களை பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள் என்பதே உண்மை.


2.   இன்று நாம் படும் துயரங்களுக்கு பொதுத்துறையானதுதான் முழுக்காரணம் என்றால் இதனை எதிர்த்து இதுவரை சுண்டுவிரலைக் கூட அசைகாதது ஏன்? அல்லது திரும்பவும் எங்களை அரசு துறையாக மாற்றுங்கள் என்று 2000 முதல் போராடாது இருந்தது ஏன்? பதில் சொல்ல திராணி உண்டா?


3.       அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இன்று மிகவும் சந்தோசமாக போராட எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கிறார்களா?\பதில் கூறமுடியுமா?


தோழர்.சி.கே.மதிவாணன் அவர்கள் பொய்பிரச்சாரம் செய்த BSNLEU மாநிலச் செயலருக்கு   ஆணித்தரமான பதிலை அளித்தார்.

இதுபோன்ற அபத்தமான செயல்கள் சென்னை BSNLEU தலைமையால் மட்டுமே செய்ய முடியும். வேறு எந்த இடத்திலும் இதுபோன்று செய்வதில்லை.


இது போன்ற பொது போராட்டத்தின் போது அந்த மேடையை தனக்கு ஏற்ப பயன்படுத்தும்   அற்ப அதிபுத்திசாலித்தனமான செயல்களை   BSNLEU தலைவர்களால்   மட்டுமே எங்கும் எப்படி வேண்டுமானாலும் தங்களுக்கு ஏற்றால்போல் செய்ய முடியும் என்பது கண்கூடாகத் தெரிந்துவிட்டது. 


 ஆதலால் நாம் நமது NFTE தலைவர்கள் இதுபோன்ற கூட்டு போராட்டங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.  கொஞ்சம் கண் அசைந்தால் போதும் அந்த இடங்களில் BSNLEU தலைவர்கள் தங்களது கேவலமான செயல்களை செய்ய தயங்க மாட்டார்கள். இதுவே அவர்களது உண்மையான உருவம் என்பதை உணர்வோம்.

No comments: