72ND

72ND
HAPPY INDEPENDENCE DAY

Friday, 20 July 2018

ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தை துவங்கியது

Image result for wage revision meeting clipart

ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தை இன்று சுமூகமான சூழ்நிலையில் தொடங்கியது. H.C.Pant CGM (Legal) தலைமையேற்று இந்த கூட்டத்தினை நடத்தி வைத்தார். நிர்வாகத்தின் சார்பாக திரு சொளரப் தியாகி சீனியர் பொதுமேலாளர் (Estt) திருமதி சுமிதி செளத்ரி Gm (EF) , திரு.குப்தா பொதுமேலாளர் (நிர்வாகம்), மற்றும் திரு சின்ஹா துணை பொதுமேலாளர் (நிர்வாகம்) ஆகியோர் பங்கேற்றனர். 

ஊழியர்களின் சார்பாக கீழ்கண்டோர் கலந்து கொண்டனர்: 

திரு.குப்தா பொதுமேலாளர் (நிர்வாகம்),அனைவரையும் வரவேற்று பேசினார். இணைந்த பேச்சுவார்த்தை குழுவை விரைவாக கூட்டிய நிர்வாகத்திற்கு ஊழியர் தரப்பு நன்றியை தெரிவித்தனர். குறித்த நேரத்தில் விரைவாக ஊதிய பேச்சு வார்த்தை முடிய முழு ஒத்துழைப்பையும் தருவதாக உறுதி அளித்தனர்.

நிர்வாகம் ஊதிய நிர்ணயம், கிராக்கிப்படி இணைப்பு இவை குறித்து பொதுத்துறை நிறுவனங்களின் அமைப்பு  DPE அளித்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் குறிப்புகளை ஊழியர் தரப்பின் முன் சமர்ப்பித்தது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே சம்பள நிர்ணயம் செய்வதில் எந்தவித முரண்பாடும் வாராவண்ணம் வழிகாட்டுதல்களை உரிய முறையில் பெற்று பேச்சு வார்த்தை நடத்தபடும் என்று தெரிவித்தது.

ஊழியர் தரப்பு மிக துரிதமாக சம்பள பேச்சு வார்த்தை நடந்து வரும் ஆகஸ்ட் 31க்குள் புதிய சம்பள விகித பேச்சு வார்த்தை முடிந்து கெயெழெத்து இடப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதற்கு நிர்வாகம் நம்பிக்கையான பதிலை தந்தது.

அடுத்த ஊதிய குழு பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்டு மாதம் 09ம் தேதி 09-08-2018 மதியம் 1530 அளவில் நடைபெறும் என்று முடிவானது.

புதிய சம்பள விகிதம் குறித்த ஆலோசனைகள் அன்று முன்வைத்து பேசப்படும்.

தோழர்களே, மறவாதீர் உங்களது கருத்துக்கள் தோழர். சி.கே.மதிவாணனுக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

நாளை கே.கே.நகர் தொலைபேசி நிலையத்தில் நடைபெறும் மாநிலப் பொதுகுழுவிலும் உங்களது கருத்துக்களை நேரிட தெரிவிக்கலாம்.


No comments: