இந்த மாத சங்கமுழக்கம்

இந்த மாத சங்கமுழக்கம்
அட்டை படம்

Thursday, 12 July 2018

அனைத்து சங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்- தோழர்.சி.கே.மதிவாணன் உரைவீச்சு

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சில சங்கங்கள் குறிப்பாக  FNTO and SEWA கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அது எந்த வகையிலான முரண்பாடுகள் என்றாலும் அது உடனடி பேசி தீர்க்கப்பட வேண்டும். இது போன்ற இணைந்த போராட்டங்களில் நாம் நரேந்திர மோடி அரசை  எதிர்த்து நடத்துவது பிறகு வெற்றி அடையாமல் போகலாம்.

என்னிடம் பேசிய சில  சங்க தலைவர்கள் தோழர்.ஜெயபிரகாஷ் (( FNTO) மற்றும் தோழர்N. D. Ram ( SEWA) இருவரும் மனம் புண்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அவர்களது ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்துகள் இன்றைய போராட்ட நோட்டீஸில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் இது குறித்து அவர்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற தகவலும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இது உண்மையென்றால் இது உடனடியாக தீர்க்கபட வேண்டியது. மிகவும் ஆபத்தானதும் கூட. இது ஒரு சுலபமான தவறு அல்ல உடனடியாக அனைத்து சங்கத்தலைவர்களையும் உள்ளடக்கிய AUAB  கூட்டம் கூட்டப்படவேண்டும்.

இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பதனை கண்டறிந்து அது குறித்து நடவடிக்கை எடுப்பட வேண்டும். அதுவே இதுபோன்று இனி தவறுகள் நடக்காமல் தடுக்க உதவும்.

அதேசமயத்தில் மிக சீனியர் தலைவர்கள் இருவரும் (FNTO and SEWA)  தோழர்.அபிமன்யுவை பற்றி தலைமை நிர்வாக அதிகாரி  CMD / BSNL and DOT. அவர்களிடம் போய் சொன்னது மிகவும் தவறு ஆகும். இது நமக்குள் உள்ள பிரிவினையை நிர்வாகத்திடம் காட்டி கொடுத்துவிடும்.

நேற்று நான் இது குறித்து நமது அகில இந்திய செயலர் தோழர்.சிங்கிடம் தொலைபேசியில் மூலம் தெரிவித்து உடனடியாக  இதில் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தினேன். அதேபோல AIBSNLEA and SNEA இரண்டு சங்கங்களுக்கும் அண்மையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைய முயற்சி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். 

எது எப்படி இருப்பினும் அனைத்து சங்கங்களிடமும் ஒரு பரந்துபட்ட தோழமை உணர்வு நிகழவேண்டும் என்பது மிக மிக அவசியம். இல்லையென்றால் இது விரிவுபட்டு கீழ்மட்ட தொண்டன்வரை சென்று சீரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே நிசர்தனம். தலைவர்கள் தங்களூக்குள் ஏற்படும் சில்லரை தகறாறுகளை பெரிதாக்ககூடாது. அனைத்து முரண்பாடுகளையும் புறந்தள்ளி ஒற்றுமையை நாம காண்பிப்பதின் மூலமே நாம் நம்மை நம்பி இருக்கிற தொழிலாளிகளையும் நமது BSNL -ஐயும் காப்பாற்ற முடியும்.
Image may contain: 5 people, including Nftcl Ckm, people smiling, people standing

No comments: