Saturday, 21 July 2018

சென்னை தொலைபேசி ... பொதுக்குழு கூட்டம் 21-07-2018


இன்று கே.கே.நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் சென்னை தொலைபேசி மாநிலத்தின் பொதுக்குழு தோழர்.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

கே.கே.நகர் கோட்டத் தலைவர் பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். சுமார் 139 மாநில நிர்வாகிகள்/மாவட்ட நிர்வாகிகள்/கோட்டச் செயலர்கள்/கிளைச் செயலர்கள்/ சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். 


விவாதப்பொருளை அறிமுகப்படுத்தி மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் துவக்க உரை ஆற்றினார்.  அவர் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மாநிலச் செயலர்கள் கூட்டத்தின் முடிவுகளை விளக்கிப்பேசினார். வரும் 24-07-2018 முதல் தலைமை பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் அனைத்து சங்கங்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் உண்ணா நோன்பினை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

புதிதாக நம் சங்கத்தில் இணைத்து கொண்ட 102 தோழர்களை வரவேற்று பேசிய மாநிலச் செயலர் அதற்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டினார். உபரி ஊழியர்களை தேவை ஏற்படும் இடத்திற்கு அனுப்பும் (Redeployment of staff)முடிவின் அவசியத்தை எடுத்துரைத்தார்.


இந்த பொதுக்குழு  NFTCL  சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  (09-08-18 and 21-08-18)  போராட்டத்தினையும் வெகு நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கவே இந்த போராட்டம் என்றும் அதற்கும் நமது சங்கம் முழு ஆதரவினையும் நல்கும் என்று கூறினார். 

இந்த பொதுக்குழு  AUAB விலிருந்து  விலகி உள்ள FNTO & SEWA இரண்டு சங்கங்களையும் திரும்ப கொண்டுவர நமது பொதுச் செயலர் சிங் முயற்சி எடுக்க வலியுறுத்தியது. அதுவே வரும் போராட்டங்களில் நமது ஒன்றுபட்ட ஒற்றுமையை காட்ட ஏதுவாக இருக்கும் என இப்பொதுக்குழு கருதுகிறது.

மூன்றாவது ஊதியம் அமைப்பு விஷயமாக அண்மையில் கூடிய கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களை மாநிலச் செயலர் விவரித்தார். 

கூட்டத்தின் முடிவில் சங்க முழக்கம் பத்திரிக்கையும் போராட்ட போஸ்டர்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட செயலரும் கூட்டறவு சங்க உதவி தலைவரும் ஆகிய சி.கே.ரகுநாதன்  அண்மையில் 18-07-2018 சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்க RGB  கூட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளை பற்றி பேசினார்.   

கூட்டத்தினை மாநிலப் பொருளாளர் ரவி நன்றி கூறி முடித்து வைத்தார்.

Image may contain: 11 people, including Kothanda Babu, outdoor
Image may contain: 1 person, standing
Image may contain: 18 people, including Ram Prabu, crowd and outdoor
Image may contain: 6 people, including Babu Varadharaj, people sitting
Image may contain: 5 people, including Nftcl Ckm, Babu Varadharaj and Nagarajan Rajan, people smiling, people standing and indoor
Image may contain: 4 people, including Babu Varadharaj and Elangovan Bsnl, people standing and indoor
Image may contain: 2 people, including Babu Varadharaj, people standing and indoor

No comments: