Thursday, 7 June 2018

BSNLEU மாநிலச் சங்கத்தின் அருவருக்கத்தக்க அணுகுமுறை

Image result for ugly attitude images

நேற்று  BSNLEU சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் ஒரு போஸ்ட்டர் வெளியிட்டுள்ளது அதில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிம்கார்டு பற்றி குறிப்பிட்டு உள்ளனர். அகில இந்திய கவுன்சில் சார்பாக அனைவருக்கும் 429 plan SIM card  வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை NFTE மற்றும்  BSNLEU கூட்டாக ஊழியர் தரப்பு சார்பாக கேட்டிருந்தோம். அதற்கு முன்பாகவே  NFTE/ CHQ  சார்பாக நமது தலைமை நிர்வாக அதிகாரிக்கு 20-02-2018 கடிதமும் கொடுத்திருந்தோம். இவைகளின் அடிப்படையில் 429 plan SIM card  உத்தரவினை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த கூட்டு முயற்சியை ஏதோ தனது வெற்றி போல BSNLEU  சங்கம் கொண்டாடுவது கேவலத்திலும் கேவலமாக உள்ளது. வெற்றி வந்தால் தனது முயற்சிபோலவும் தோல்வி ஏற்பட்டால் அது அனைவராலும் என்பதுபோலவும் சில காலமாக BSNLEU  சங்கம் சொல்லி வருவது அருவருக்கத்தக்க செயல் என்று அனைவரும் கூறுகின்றனர். இது முழுவதுமாக ஊழியர் தரப்பு வெற்றி என்பது அனைவரும் அறிவர். இதனை தனது வெற்றியாக பறைசாற்றுவது குழந்தைத்தனமான ஒன்றாகும். அப்படி என்றால் 2004 லிருந்து ஒரே அங்கீகரிக்கபட்ட சங்கமாக இருந்த BSNLEU  கீழ் காணும் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பு ஏற்குமா?

1.   மூன்றாவது ஊதிய மாற்றம் இதுவரை அமுல்படுத்த தாமதம் ஆவது.
2.   கடந்த 11 வருடங்களாக 2007 முதல் எந்த அலவன்ஸ்களளும் தரப்படவில்லை.
3.   கடந்த 9 வருடங்களாக போனஸ் மறுக்கப்பட்டது.
4.   BBNL  என்ற பிராட்பேண்டிற்கான தனி கம்பெனி அமைக்கப்பட்ட்து.
5.   தகுதி அடிப்படையில் ஊழியருக்கான பதவி உயர்வு தேர்வு நடத்தபடுகிறது.
6.   கருணை அடிப்படை வேலைக்கு மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயம்.
7.   . BSNLMRS  திட்டம் முழுமையாக சீரழிக்கப்பட்டது.
8.   காண்டிராக்ட் ஊழியர்கள் அவர்களது முதலாளிகளால் கடுமையாக சுரண்டப்படுகின்றனர்.
9.   இலாகா வேலைகள் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைத்தல்.
10.  தனி டவர் கம்பெனிக்கு அனுமதி.


இவை அனைத்தும் BSNLEU சங்கத்தின் சாதனைக்கு சில உதாரணங்கள்.


இன்னும் கீழ்காணும் சிலவற்றிற்கும் தாங்களே காரணம் என்று கூறலாம்..அவை


1.    BSNL உருவாகி 18 வருடங்கள் ஆனபின்பும் இன்னும் நிலையான உத்தரவுகள் வெளியிடப்படவில்லை.
2.   தொழிலாளர்களுக்கு எதிரான நடத்தை விதிகள் 2006. 
3.   நேரடியாக இலாகாவிற்கு தேர்ந்தடுக்கப்பட்ட தோழர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் மறுப்பு..
4.   ஓய்வு ஊதியம் அரசு ஊழியருக்கு 01-01-2016 முதல் திருத்தப்பட்டு வழங்கப்பட்டும் நமது தோழர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
5.   குறைந்தபட்ச குடும்ப ஓய்வூஉதியம் மத்திய அரசு ஊழியருக்கு 9000 ஆக்கப்பட்டும் இதுவரை நமது தோழர்களுக்கு 3000 மட்டுமே வழங்கப்படுகிறது..
6.   இதுவரை அகில இந்திய/ மாநில/மாவட்ட கவுன்சில்கள் முறையாக நடைபெறவில்லை

இவை அனைத்தையும் தங்களது சாதனைகளாக BSNLEU சங்கம் கூறுமானால் நாங்கள் எந்த சண்டைக்கும் வரத் தயாரில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
======================================================================================================


தோழர் ஜெகன் வாழ்கிறார்!
ஆம். தோழர் ஜெகன் நம்மில் பலரின் உள்ளத்தில்

இன்றும் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார். மறைந்து 12 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது
என்பதை நம்ப முடியவில்லை. அவரைப் பற்றி நிறைய எழுதி விட்டோம். படித்து விட்டோம்.
1969 மே 17 நான் திருப்பத்தூரில்(வ.ஆ) இயக்குநராகப் பணியில் சேர்ந்த ஒரு சில மாதங்களில் அங்கு கிளைக் கூட்டத்தில்
பேசிய ஜெகனின் பேச்சைக் கேட்காமலிருந்திருந்தால் ஒரு நிறைவற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருப்பேன்.
என்னைத் தடம் மாற்றிய சத்தியப் பேச்சு
அவரின் பேச்சு! அதுவரை உறுதியான பக்திமானாக இருந்த என்னை சமூகத்தைப்
பற்றிக் கவலைப் படுபவனாக மாற்றிய மந்திரப்
பேச்சு அது! தொழிற் சங்கத்தில் ஈடுபாடு கொள்ள
வைத்ததுடன் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக அடித்தளமிட்டதும் அந்தப் பேச்சுதான். அப்போது
அங்கு தண்டனை மாற்றலில் வந்திருந்த தோழர்
ஜீவியிடம் அவரைப் பற்றி ஏராளம் தெரிந்து கொண்டேன். திருப்பெரும்பூதூரிலிருந்து சென்னை மாற்றலில் வந்தபின் தோழர் ஜெகனுடன் சில ஆண்டுகள் பழுதுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் சேர்ந்து பணியாற்றியது
நான் பெற்ற பெறும் பேறு. இப்படி பலரையும்
பண்படுத்திய மாபெரும் தலைவன்! அப்படி ஒரு 
போதும் காட்டிக் கொள்ளாத எளிமையின் சிகரம்!
அவர் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்க
சபதமேற்போம்.

கட்டுரை: தோழர்.வி.கே.ஜி





No comments: