Friday, 1 June 2018

.. உலகில் முயன்றால் முடியாதது என்று ஒன்றும் இல்லை - தோழர் OPG வழியில் தோழர் CKM .. 

இன்று 01-06-18 காலை 20 காசுவல் தோழர்கள் சென்னை மாநிலச் சங்க அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தோழர்.சி.கே.மதிவாணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். காரணம் ...இன்று சென்னையில் விடா முயற்சியுடன் வழக்காடி - தீர்ப்பு பெற்ற பின்பும் நிர்வாகம் 3 ஆண்டுகளாக நிர்வாகம் 20 காசுவுல் தோழர்களுக்கு தகுதி அடிப்படையில்  TSM வழங்காமல்இழுத்தடித்ததை நிர்வாகத்திடம் மாநில கவுன்சில் 24-05-18 அன்றய கூட்டத்தில்  பேசி இன்று அந்த  தோழர்களுக்கும் TSM அந்தஸ்து தர நிர்வாகம் இசைந்துள்ளது. 

இந்த இருண்ட காலத்திலும் கூட சங்கம் முயன்றால், போராடினால் வெற்றி பெறலாம் என்ற பாடத்தை தோழர் CKM உலகிற்கு காட்டி உள்ளார்.

அனைத்து தோழர்களும் 240 நாட்கள் தொடர்ந்து மூன்று வருடங்களாக வேலை செய்துள்ளனர்.  

. . இன்று சென்னையில் BSNL ல் வரலாற்று நாயகனாக பவனி வருகிறார் CKM - போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரி தூற்று வோர் தூற்றட்டும் - எல்லா புகழும் NFTE சங்கத்திற்கே என்று தான் ஒரு SDE ஆக ஓய்வு பெற்று இருந்தாலும் தொடர்ந்து சுரண்டப்படும் தொழிலாளிக்கு அகில இந்திய அளவில் சங்கம் வைத்து அதன் பொதுச் செயலராய் செயலாற்றி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை ஒவ்வொன்றாக பெற்று தருகிறார். அண்மையில் சென்னை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பெற்று கொடுத்துள்ளார். 

காலம் தாமதம்தான் ஆனாலும் விடாப்பிடியாய் பல போராட்டங்களை நடத்தி போனஸ் பெற்று கொடுத்துள்ளார் - தோழர் OP குப்தா வழியில் பயணம் செய்யும் யாரையும் யாரும் வீழ்த்த முடியாது - தடைக்கற்கள் ஆயிரம் உண்டென்றாலும்  தடம் தோள்கள் துணை கொண்டு தடைகளை தகர்ப்போம் - வெற்றி பெறுவோம்.. முன்னேறுவோம் - இறுதி வெற்றி நமதே - வாழ்க CK M .

தகவல்: தோழர்.சி.கே.எம் முகநூல்
Image may contain: 12 people, including Arumugam Rathinam, people standing

No comments: