Wednesday, 23 May 2018

தயாராவோம்......தோழர்களே!!



 AUAB இன்று நடைபெற்ற கூட்டத்தில்  (23-05-18) வரும் 28-05-2018 அன்று டவர் கம்பெனி அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பு செய்ய அறைகூவல் விடுத்துள்ளது.

வரும் 28-05-2018 அன்று  BSNL Board of Directors கூட்டம்  ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது.  BSNL  2000 October-ல் உருவானபோது அனைத்து டைரக்டர்களின் கூட்டம் டெல்லியில்  நடைபெற்றது, ஆனால் இன்று டெல்லியைவிட்டு வெளியிடத்தில் நடத்திட  நிர்வாகம் முடிவு செய்துள்ளது, அதேநாள் தொலைதொடர்பு இலாகா டவர் கம்பெனிக்கு நியமிக்கப்பட்ட திரு.அமித் யாதவின் இயக்குனர் பதவியை அங்கீகரிக்கும் விதமாக இந்த அவசர இயக்குனர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக நமது அதிகாரிகள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு கருதுகிறது. இது அரசின் நரிதந்திரமாகவே தெரிகிறது.

இதனை எதிர்க்கும் விதமாக நமது சங்கங்கள் ஒன்றிணைந்து அதேநாள் ஹைதராபத்தில் மாபெரும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது.

அதே சமயத்தில் மற்ற மாநிலங்களின்  அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முடிவு செய்ய அனைத்து சங்கங்ளின் மாநிலச் செயலர்களும் நாளை மறுநாள் 25-05-18 கூடி முடிவெடுக்க உள்ளனர். 

நம்முடைய   மாநில பொதுக்குழு வரும்24-05-18 அன்று நடைபெறும் என மாநிலச் சங்கம் அறிவித்துள்ளது.

தோழர்களே!! நடைபெற இருக்கும் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட அனைத்து தோழர்களும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். 

No comments: