Friday, 11 May 2018

சங்கமுழக்கம் என்றோர் கருத்தாயுதம்

சங்கமுழக்கம் சாமான்ய ஊழியனின் உரிமை முழக்கமாக தொடர்ந்து வெளிவருகிறது. வண்ணமயமான முன் பின் அட்டைப் படங்களுடன்
கண்ணைக்கவரும் வகையிலும் கருத்தாயுதமாகவும் வெளியிடப்படுகிறது.

சொல்லப்போனால் பல சங்கங்களின் மாநிலச்சங்க பத்திரிகைகளை பார்க்கும்போது நிறைந்த விஷயங்களுடனும் பல்வேறு தொகுப்புகள் அடங்கியதாகவும் வெளிவருவது நாம் அனைவரும் அறிந்ததே.  

ஆனால் இதில் வரும் செய்திகளும் ஆழ்ந்த சமூகம் சார்ந்த கட்டுரைகளும் முழுமையாக வாசிக்கப்படுகிறதா?  உள் வாங்கப்படுகிறதா? என்று ஓர் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு இதழ் வெளிவர எந்த அளவிற்கு அதன் ஆசிரியர் விஷயங்களை தருவிக்க வேண்டும், ஆழ்ந்த சிந்தனையுடன் எழுத்தாக்கம் செய்ய வேண்டும், மற்றும் அதற்குண்டான பொருட்செலவு எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் அனைத்து தோழர்களும் சிந்திக்கவேண்டும். 
அதன் அடிப்படையில் வெளிவரும் சங்க முழக்கத்தின் தலைப்புச் செய்திகளின் தொகுப்பாக இதை சமர்ப்பிக்கிறேன்.

மே மாதம் 2018 சங்க முழக்கம்
செய்தி - 1 : பாரத் ரத்னா பீம்ராவ் அம்பேத்கர்.

65 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த டாக்டர். அம்பேத்கர் அவரது காலத்தில் அவருக்கு இணையாக கல்விகற்ற மற்றும் அறிவாளிகள் உலக அளவில் மிகச்சிலரே.

நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அண்ணல் அம்பேத்கர் இருந்தபோது தான் எட்டுமணி நேர வேலை என்பது தொழிலாளருக்கு சட்டபூர்வமான உரிமையானது.
செய்தி - 2: மே தினவிழா -2018

ஆகஸ்ட் ஸ்பைஸ் ஆஸ்கார்நிபீ  சாமுவேல் பியல்டன் ஜார்ஜ் எங்கல்ஸ் ஆல்பர்ட் பார்ஸன் அடால்ப் பிஷர் மைக்கேல் ஸ்கவாப் லூயிஸ் லிங் ஆகிய எட்டு தலைவர்களே மே தின தியாகிகளாக உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களால் கடந்த பல ஆண்டுகளாக நினைவுகூறப்படுகிறார்கள்.

இவ்வாண்டு மே தினத்தில் நாம் BSNL நிறுவனத்தை பாதுகாக்கவும் அரசும் நிர்வாகமும் கூட்டாக சதி செய்து நமது நிறுவனத்தை நிர்மூலமாக்கிட முயல்வதை முறியடிக்கவும் உறுதிபூணுவோம். 11 ஆண்டுகள் கழிந்த பிறகும் ஊழியருக்கு ஊதிய மாற்றம் தராமல் தாமதிக்கும் அநியாயத்தை முடிவுக்கு கொண்டு வரவும் உறுதியேற்போம். 

செய்தி-3 ஜியோவின் அடுத்தகுறி பிஎஸ்என்எல் ?

தோழர் மதிவாணனின் இந்த பேட்டி செய்தி அனைவராலும் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து வலைதளங்களிலும் இந்த செய்தியை காணலாம். எதிர்வரும் காலத்தில் நடைபெற இருப்பதை படம் பிடித்தாற்போல் நச்சென்று அவர் கூறியிருப்பதால் பலரும் அதிர்ந்து போய் இருப்பது உண்மை. அது அப்படியே வரிவடிவமாக சங்கமுழக்கம் இதழில் வெளிவந்துள்ளது பாராட்டத்தக்கது.

செய்தி - 4  நாட்டு நடப்பு நல்லா இல்லீங்கோ !

இந்த தலைப்பு ஏதோ சினிமா செய்தியின் தலைப்பு போல் இருந்தாலும்  சமூகத்தில் நிலவும் அவலநிலை மற்றும் உண்மை செய்திகளை வெளியிட்டுள்ளது.
எட்டுவயது ஆஷிபா என்ற காஷ்மீர சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை;
அதில் மத்தியில் ஆளும் பா.ஜா.க.வின் நிலைமை பற்றி சமூகப்பார்வையுடன் வருத்தமும் கண்டிப்பும் தெரிவித்து எழுதப்பட்டுள்ளது. பா.ஜ.க. என்பதற்கு பாலியல் ஜல்ஸா கட்சி என்று பாமரமக்கள் பெயரிடுவார்களோ என்ற நைய்யாண்டித்தனம் வேதனையோடு கூடிய கண்டிப்பு என்பதாக உள்ளது.

செய்தி - 5. காவேரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைந்திட

நமது ஊழியர்கள் நலனுக்காக மட்டும் என்றில்லாமல் தமிழகத்தின் வாழ்தாரப்பிரச்சனையிலும் எங்களுக்கும் பங்கு உண்டு என்று NFTE / NFTCL  நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் படத்தொகுப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

செய்தி - 6  SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம்.

சமூகத்தில் அடித்தட்டில் உழலும் கோடானுகோடி மக்களின் மீதான வன்கொடுமைக்கு கடுமையான தண்டனை வழங்கிட வகை செய்யும் சட்டத்தை இந்த தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்துள்ளது.
BJP யினரின் நிலப்பாடு வெட்டவெளிச்சமாகிவிட்டதை தெளிவான சமூகப்பார்வையுடன் ஆதாரத்துடன் ஆசிரியர் விவரித்து குறிப்பிட்டுள்ளது பாராட்டத்தக்கது.


சங்க முழக்கம் வெளியீடு அனைத்து தோழர்களாலும் வாசிக்கப்பட வேண்டும் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டும்- விவாதிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்த செய்தித் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது.

சங்கமுழக்கத்தின் தொடர் செயல்பாடு கருத்தாயுதப் போராட்டம் மேலும் தொடரட்டும் .....  மேலும் வலுப்பெறட்டும் சங்கமுழக்கம்..எனப்பாராட்டுவோம்....

வெளியீடு : NFTE வடசென்னை மாவட்டம்.

No comments: