Thursday, 8 March 2018

Happy women's day




#மகளிர்_தினம்

என்றென்றும் உழைக்க பிறந்தவளாய்
ஓடோடி உழைக்கின்றவளாய் ,
உருவகப்படுத்தப்பட்டவளாகிப்போனாள் -இவள்.

ஒளி ஊடக நிகழ்வுகளில் விளம்பரங்களின்
இடையில் விளம்பரமாகியது -மகளிர் தினம் என..

எண்ணிலடங்கா பெண்களில் ஏற்றத்தை பெற்றவர்- சிலரே என்றாலும்
அவர்கள் மட்டுமே பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும்
வெளிப்படும் நாள்தான் அது என்றாகிப்போனது.

ஆண்பிள்ளை பெண்பிள்ளை என பாரபட்சமின்றி வளர்க்கின்ற பெண்ணே,
 சிறந்த சமுதாயத்தை உருவாக்குபவள்.
ஆண் பெண் இருவருமே சரியான பங்களிப்பை
வீட்டிலும் மற்றும் சமூகத்திலும் தர
தாழ்வுகளே இல்லாமல் போகும்.

என்னதான் மகளிர் தினம் எனகொண்டாடப்பட்டாலும்
அன்று கூட ஒரு முடிவை தனியாக எடுக்க இயலாத நிலை உள்ள
பெண்கள் கோடி உண்டு ,
என்று இந்த சமூகம் சரியான அங்கீகாரம் ,
அதாவது இவள் இல்லையெனில்
இப்புவியே இல்லைதானே..

கடவுளாய்,தாயாய்,சகோதரியாய்,தோழியாய்,காதலியாய்
அனைத்திலும் அவள் இன்றி ஏதுமில்லை
என்றாகிப்போனதை ஏற்றுக்கொள்ளும்
 மனப்பக்குவம் கொண்டால் எல்லா நாளுமே
 மகளிர் நாளே(தினமே)

தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

No comments: