Monday, 12 March 2018

குரங்கணி காட்டுத்தீயில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்








மலைப்பகுதி கோர தீவிபத்து

இதுவரை 9 பேர் பலி, அவர்கள் பெயர் விபரம் தெரியவந்துள்ளது, இதிலும் ஒருவரது உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது, 30 அடி பள்ளத்தில் இருப்பதால் மீட்பு பணியில் சிரமம் எழுந்துள்ளது..

புனிதா, சென்னை
அருண், கோவை ,
பிரேமலதா, சென்னை,
சுபா, சென்னை,
விபின், கோவை  ,
அகிலா, சென்னை,
விவேக், ஈரோடு,
தமிழ்ச்செல்வன், ஈரோடு,
விஜயா, ஈரோடு.

மீட்கப்பட்ட பலருக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.. அங்கே இது தொடர்பான தகவல் மையம் மொபைல் எண்கள்,

94450 00586
99947 93221

கமேண்டோ படைகள், மீட்பு படைகள் தவிர உள்ளூர் கிராம மக்கள் பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. காட்டுத்தீ என்பது விபத்து, இதில் யாரையும் குறை சொல்லிக்கொண்டு இருக்க  முடியாது.. பல்லாண்டுகளாக அந்த பகுதி, மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற பகுதி.., பல மலையேற்ற பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.. விதிமீறல்கள் இருக்கின்றனவா என இனிமேல் தான் தெரியவரும்.. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. காயப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிக்கட்டும் நிர்வாகம்..

#TheniForestFire
#TheniFire


No comments: